புடின் மற்றும் ஜெலென்ஸ்கி சந்தித்தால்... முடிவு இதுதான்: ரஷ்ய அமைச்சர் அதிரடி
ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையிலான சந்திப்பு கண்டிப்பாக எதிர்மறையாக அமையும் என ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ராணுவ தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்து ஒரு மாதமாக தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், போரை நிறுத்துவது தொடர்பான நான்காவது கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்துவது குறித்து இருநாட்டு அதிகாரிகளும் தீவிர ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் திங்கள்கிழமை ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், ரஷ்யா நடத்திவரும் ராணுவ நடவடிக்கை குறித்து துருக்கி நடத்தும் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யாவின் தூது குழு தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, ரஷ்ய ஜனாதிபதி புடின் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இடையிலான சந்திப்பு தற்போதைக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்ததுடன், இந்த சந்திப்பு இப்பொது ஏற்பட்டால் அது எதிர்மறையாக முடிவடையும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி புடின் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியை சந்திக்க மறுத்தது இல்லை, ஆனால் அதற்கு முன்னதாக இந்த சந்திப்பு நன்கு தயாராக இருக்கவேண்டும் என்பதே அவர் அடிப்படையில் கருதும் ஒரே விஷயம் ஆகும்.
தற்போதைய நெருக்கடியானது மிக நீண்ட காலமாக, ஆண்டுகளாக தொடர்வதால் ஏராளமான பிரச்சனைகள் உருவாக்கி உள்ளன. இந்த தருணத்தில் அவர்கள் என்ன நினைக்கிறீர்கள் நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதை பற்றிய கருத்துக்களை இப்பொது பரிமாறி கொள்வது எதிர்மறையாக அமையும் என வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், துருக்கியின் இஸ்தான்புல்லில் திங்கள்கிழமை நடைபெற இருந்த பேச்சுவார்த்தை செய்வாய்க்கிழமை அன்று நடைபெறலாம் என ரஷ்ய செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் உறுதிப்படுத்தியுள்ளார்.
கடத்தப்பட்ட மேயர்களின் கதி இதுதான்: ஜெலென்ஸ்கி ஆவேச குற்றசாட்டு!