கடத்தப்பட்ட மேயர்களின் கதி இதுதான்: ஜெலென்ஸ்கி ஆவேச குற்றசாட்டு!
ரஷ்ய படைகளால் கடத்தப்பட்ட உக்ரைன் நகரின் மேயர்களில் சிலர் கொலை செய்யப்பட்டு விட்டதாக அந்த நாட்டின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் தாக்குதல் தீவிர நிலையை அடைந்து இருக்கும் இந்த நிலையில், உக்ரைனின் முக்கிய நகரங்களான மரியுபோல், கீவ் மற்றும் லிவிவ் ஆகிய பகுதிகளை கைப்பற்றும் முனைப்பில் நகரங்களை சுற்றிவளைத்து ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி The Economist பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், கடத்தப்பட்ட எங்கள் நாட்டின் மேயர்களில் சிலரை ரஷ்ய ராணுவம் கொலை செய்துவிட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.
⚡️ Zelensky: Some mayors abducted by Russia turned up dead.
— The Kyiv Independent (@KyivIndependent) March 28, 2022
“(Russians) are kidnapping the mayors of our cities. Some of them we cannot find. Some of them we have already found, and they are dead,” President Volodymyr Zelensky said in an interview with The Economist.
மேலும் இதுவரை ரஷ்ய படைகளால் கடத்தப்பட்ட உக்ரைன் நாட்டு மேயர்களில் சிலரை இன்றுவரை கண்டுபிடிக்க முடியவில்லை, கண்டுபிடிக்கப்பட்ட மேயர்களும் கொலை செய்யப்பட்ட நிலையிலேயே கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அமைதியை விரும்பும் நாடு என்பதில் எந்த மாற்றமும் இல்லை மற்றும் ரஷ்யாவின் முக்கிய கோரிக்கையை தீவிரமாக பரிசீலித்து வருவதாகவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு விரைவில் காணப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி இதற்கு முன்பு தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
போரில் உயிரிழந்த உலக குத்துசண்டை சாம்பியன்: விரைவில் பழி தீர்ப்போம்..பயிற்சியாளர் சூளுரை!