போரில் உயிரிழந்த உலக குத்துசண்டை சாம்பியன்: விரைவில் பழி தீர்ப்போம்..பயிற்சியாளர் சூளுரை!
உக்ரைனில் ரஷ்யா நடத்திவரும் போரில் அந்த நாட்டின் முதல் உலக குத்துசண்டை வீரரான மாக்சிம் காகல்(30) உயிரிழந்துள்ளார்.
உக்ரைனில் ரஷ்யாவின் போர் தாக்குதல் ஒரு மாதத்தை கடந்து இன்றும் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைனை ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக அந்த நாட்டின் ஆண்கள் பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் தாமாக முன்வந்து ரஷ்ய தாக்குதலை எதிர்த்து போராடி வருகின்றனர்.
இந்த நிலையில் அந்த நாட்டின் முக்கிய துறைமுக பகுதியான மரியுபோல் நகரை பாதுகாக்கும் முயற்சியில் உக்ரைனின் அசோவ் சிறப்புப் படை பிரிவுடன் இணைந்து அந்த நாட்டின் பிரபல குத்துசண்டை சாம்பியன் மாக்சிம் காகல்(30) ஈடுபட்டு இருந்தார்.
⚡️ Ukrainian kickboxing champion killed in combat while defending Mariupol.
— The Kyiv Independent (@KyivIndependent) March 27, 2022
Maksym Kagal, ISKA kickboxing champion, was killed in the battle for the besieged city Mariupol, his coach reported.
இதனை தொடர்ந்து, கடந்த 25ம் திகதி மரியுபோல் நகரில் ரஷ்ய படையினர் நடத்திய தாக்குதலில், உக்ரைனின் அசோவ் சிறப்புப் படை பிரிவுடன் இணைத்து போராடி வந்த பிரபல குத்துசண்டை வீரர் மாக்சிம் காகல்(30) உயிரிழந்துள்ளார்.
இந்த தகவலை அவரது பயிற்சியாளர் ஓலே ஸ்கைர்டா(Oleh Skyrta) ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்து வெளியிட்ட பதிவில், இந்த போர் துருதிஷ்டவசமாக நமது சிறந்த வீரரை எடுத்து கொண்டுவிட்டது என தெரிவித்துள்ளார்.
ஓலே ஸ்கைர்டா குத்துசண்டை வீரரான மாக்சிம் காகலை பற்றி விவரிக்கையில், மிகவும் அழகான கிரெமென்சுக்(Kremenchug) பகுதியில் இருந்து முதன் முதலில் உருவாகிய உலக குத்துசண்டை சாம்பியன் மற்றும் உக்ரைன் குத்துசண்டை அணியின் ஆடவர் பிரிவின் முதல் உலக குத்துசண்டை சாம்பியன் மாக்சிம் காகல் ஆவார். இவர் ஒழுக்கம் மற்றும் நேர்மை நிறைந்த மனிதர் எனவும் தெரிவித்துள்ளார்.
குண்டு மழைக்கு மத்தியில் கங்காருவை காப்பாற்றிய தன்னார்வலர்: குவியும் பாராட்டுக்கள்
மேலும் அவர் தெரிவித்த கருத்தில், சகோதரரே உங்கள் மனம் சாந்தி அடையட்டும், உன்னுடைய இறப்புக்கு கண்டிப்பாக நாங்கள் பழிவாங்குவோம் என தெரிவித்துள்ளார்.