NATO நீர்பரப்பில் நுழைந்த புடினின் கோஸ்ட் கப்பல்
NATO நீர்பரப்பில் புடினின் கோஸ்ட் கப்பல் நுழைந்துள்ளது.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தலைமையிலான “shadow fleet” எனப்படும் மறைமுக எண்ணெய் கப்பல்களில் ஒன்றான Kairos என்ற மிகப்பெரிய டாங்கர், கருங்கடலில் கட்டுப்பாடின்றி மிதந்து, NATO நீர்பரப்பில் நுழைந்தது.
இந்த கப்பல், கடந்த நவம்பர் 29-ஆம் திகதி துருக்கி கடற்கரைக்கு அருகில், உக்ரைன் பயன்படுத்திய Sea Baby drone தாக்குதலுக்கு உள்ளானது.
1,49,000 டன் எடையுடைய, 899 அடி நீளமுள்ள இந்த கப்பல், ரஷ்யா எண்ணெய் தடைகளை தவிர்க்க பயன்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீட்பு முயற்சி
துருக்கி கப்பல் Timur Bey மூலம் Kairos-ஐ இழுத்துச் செல்லும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அந்த மீட்பு நடவடிக்கை திடீரென கைவிடப்பட்டது.
இதனால், மின்சாரம் இழந்த Kairos, ghost ship போல கருப்பு கடலில் மிதந்து, பல்கேரியாவின் Ahtopol என்ற கடலோர நகரம் அருகே 900 yards தூரத்தில் தோன்றியது.
அச்சம்
கப்பல் எந்தவித ரேடியோ தொடர்புக்கும் பதிலளிக்காததால், பல்கேரிய கடற்படை, எல்லை பாதுகாப்பு படைகள் மற்றும் கடல்சார் நிர்வாகம் அவசரமாக நடவடிக்கை எடுத்துள்ளன.
அப்பகுதி மக்கள், கடற்கரையிலிருந்து மிக அருகில் மிதக்கும் அந்த கப்பலை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர்.
மர்மம்
மீட்பு நடவடிக்கை ஏன் கைவிடப்பட்டது என்பது இன்னும் தெளிவாகவில்லை. அதிகாரிகள் இதை ஒரு "கனவு காட்சி" எனக் குறிப்பிட்டுள்ளனர். NATO நீர்பரப்பில் ரஷ்யாவின் மறைமுக எண்ணெய் கப்பல் தோன்றியதால், பாதுகாப்பு மற்றும் அரசியல் ரீதியாக பெரும் கவலை எழுந்துள்ளது.
இந்த சம்பவம், உக்ரைன் போரின் தாக்கம் மற்றும் ரஷ்யாவின் எண்ணெய் தடைகளை தவிர்க்கும் முயற்சிகள் குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Putin ghost ship Black Sea incident, Kairos tanker NATO waters Bulgaria, Ukrainian Sea Baby drone attack, Russia shadow fleet oil sanctions, Gambian flagged Kairos vessel news, NATO response to drifting tanker, Bulgarian coast ghost ship sighting, Russia Ukraine war maritime impact, Ghost ship Kairos rescue abandoned, MSN Putin ghost ship NATO report