சுருங்கிவரும் புடினின் தொடர்பு வட்டாரங்கள்: சுயசரிதை நூலாசிரியர் தகவல்!
- ஜனாதிபதி புடின் சந்திப்புகள் பெரும்பாலும் விடியோ அழைப்பு வயிலாகவே நடைப்பெறுகிறது.
- ரஷ்யாவின் மத்திய வங்கியின் ஆளுநர் எல்விரா நபியுல்லினா பதவி விலக போவதாக அறிவிப்பு
- அவரது சிந்தனைகளுக்கு எதிரான மாற்று கருத்துகளை புடின் சகித்துகொள்ள மறுக்கிறார்.
ரஷ்ய ஜனாதிபதி புடினின் நெருங்கிய உள்வட்ட உறுப்பினர்களின் எண்ணிக்கை சுருங்கிகொண்டே வருவதாக அவரது சுயசரிதை நூலாசிரியர் மார்க் கலியோட்டி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையானது இன்று 59 நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடினின் நெருங்கிய உள்வட்ட உறுப்பினர்கள் சிலர் உக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கையால் அதிருப்தி அடைந்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
கொரொனா தொற்று தொடங்கிய ஆரம்பதில் இருந்தே பெரும்பாலான சந்திப்புகளை விடியோ அழைப்பு வாயிலாக ஜானதிபதி புடின் நடத்த தொடங்கி விட்டார், இந்த வசதி முலம் அவரது கருத்துக்கு எதிராக யாரேனும் மாற்றுக் கருத்து முன்வைத்தால் இணைப்பை துண்டித்துவிட்டு செல்வதற்கு அவருக்கு வசதியாக இருக்கிறதாம்.
அந்தவகையில், உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போர் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யாவின் மத்திய வங்கி ஆளுநர் எல்விரா நபியுல்லினா பதவி விலக போவதாக அறிவித்தார்.
இதற்கு அவர் வெளியிட்ட காரணத்தில், ராணுவ நடவடிக்கையால் ரஷ்யாவின் பொருளாதாரம் சீர்குலைந்து அழியப் போகிறது என்று மட்டும் தெரிவித்து இருந்தார்.
எல்விரா நபியுல்லினாவின் பதவி விலகலை எற்க மறுத்த புடின், அவர் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று மட்டும் தெரிவித்து விட்டு இணைப்பை துண்டித்து விட்டாராம்.
இதுபோல ரஷ்யாவின் பெரும்பாலான அரசு அதிகாரிகள் மற்றும் ஆலோசகர்கள் உக்ரைன் மீதான தாக்குதல் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: இந்திய பிரதமர் மோடி- ஜான்சன் சந்திப்பு: ரஷ்யா தொடர்பாக எந்தவொரு அழுத்தமும் தரவில்லை
மேலும் இது தொடர்பாக சிலர் வெளியிட்ட கருத்தில், ஜானதிபதி புடின் அவருக்கு எதிரான சிந்தனைகளை சகித்துகொள்ள மறுகிறார் என தெரிவித்துள்ளனர்.
இது போன்ற நடவடிக்கையால் ரஷ்ய ஜானதிபதி நெருங்கிய வட்டாரங்களின் அளவு சுருங்கிகொண்டே வருவதாகவும், பாதுகாப்பு கவுன்சிலின் செயலாளர் நிகோலாய் பட்ருஷேவ் போன்ற சில நபர்களை மட்டுமே அவரது நெருங்கிய கருத்து பரிமாற்றத்திற்கு நம்புவதாகவும் அவரது சுயசரிதை நூலாசிரியர் மார்க் கலியோட்டி தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த செய்திக்கான வளம்: MailOnline