FIFA உலகக்கோப்பை நடக்கும் கத்தாரை தாக்கிய சூறாவளி, ஆலங்கட்டி மழை
2022 FIFA உலகக் கோப்பையை நடத்தும் வளைகுடா நாடான கத்தாரில் நேற்று மோசமான வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன.
சனிக்கிழமையன்று பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்து இடையே காலிறுதி ஆட்டம் நடைபெறவுள்ள நிலையில், போது கத்தாரை ஆலங்கட்டி மழையுடன் சூறாவளி தாக்கியது .
தலைநகர் தோஹாவிற்கு வடக்கே 50 மைல் தொலைவில் உள்ள ராஸ் லஃபான் தொழில் நகரத்தில் சூறாவளி காற்று வீசியது.
பெரும்பாலான உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறும் Al Khor-ன் Al Bayt மைதானத்திற்கு அருகில் கருமேகங்கள் திரண்டு காணப்பட்டன.
Al Bayt Image: Getty Images
கத்தார் வானிலை ஆய்வு மையம் மழை குறித்து 'தயவுசெய்து கவனமாக இருங்கள், சாரல் மழை இடியுடன் கூடிய மழையாகலாம்' என மக்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. எச்சரிக்கை வெளியிட்ட சிறிது நேரத்திலேயே வானிலை ஆய்வு மையம் சூறாவளியின் காட்சிகளை ட்விட்டரில் பகிர்ந்து.
கத்தாரின் வடகிழக்கு கடற்கரையில் கைவிடப்பட்ட அல் ஹுவைலா நகரத்தில் மற்றொரு சூறாவளி காணப்பட்டது.
வரும் நாட்களில் பரவலாக மழை மற்றும் வெப்பநிலை குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
#الحويلة الآن #كأس_العالم_قطر_2022 #كأس_العالم_2022 #قطر_2022#الدوحة #قطر pic.twitter.com/qeP0KK2ShO
— أرصاد قطر (@qatarweather) December 7, 2022
மத்திய கிழக்கு நாடுகளில் சூறாவளி என்பது ஒரு பொதுவான வானிலை நிகழ்வு அல்ல. அப்படியே உருவானாலும் ஒப்பீட்டளவில் அவை வலுவாக இருந்ததில்லை. இருப்பினும் அவை குடியிருப்புப் பகுதியைத் தாக்கினால் குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும். 2016-ல் கத்தாரில் பல சூறாவளிகள் பதிவாகியுள்ளன.
உலக இடர் குறியீட்டின் (World Risk Index) படி, இயற்கை பேரழிவை சந்திக்கும் வாய்ப்பு குறைவாக உள்ள நாடு கத்தார்.
கத்தாரில் புதன்கிழமை 27 டிகிரியாக இருந்தது, அடுத்த சில நாட்களில் வெயில் சற்று குறைந்து 23-25 டிகிரியாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
@Snapchat/Twitter @TannoutyZiad
புதன்கிழமை கத்தாருக்கு வருகை தந்த உலகக்கோப்பை ரசிகர்கள் மீது மிகப்பெரிய ஆலங்கட்டி மழை பெய்ததாக கூறப்படுகிறது.
மக்கள் ஆலங்கட்டி மழையை எடுத்து, அவற்றின் புகைப்படங்களை ட்விட்டரில் பதிவேற்றினர்.
FIFA காலிறுதிப் போட்டிகள்
காலிறுதியில் வெள்ளிக்கிழமையன்று பிரேசில் vs குரோஷியா மற்றும் நெதர்லாந்து vs அர்ஜென்டினா போட்டிகளுடன் தொடங்குகின்றன.
அதைத் தொடர்ந்து சனிக்கிழமையன்று இங்கிலாந்து vs பிரான்ஸ் மற்றும் மொராக்கோ vs போர்ச்சுகல் போட்டிகள் நடைபெறவுள்ளன.
#رأس_لفان الآن
— أرصاد قطر (@qatarweather) December 7, 2022
#كأس_العالم_قطر_2022 #كأس_العالم_2022 #قطر_2022#الدوحة #قطر #Doha #Qatar #WorldcupQatar2022 #Qatar2022 pic.twitter.com/pHTt4VwNHf
أمطار الخير في #رأس_لفان اللهم صيباً نافعا #كأس_العالم_قطر_2022 #كأس_العالم_2022 #قطر_2022#الدوحة #قطر pic.twitter.com/szuNl6uOWJ
— أرصاد قطر (@qatarweather) December 7, 2022