அமெரிக்காவிடம் 160 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்த கத்தார் - வரலாற்று சாதனை என அறிவித்த ட்ரம்ப்
அமெரிக்காவின் Boeing நிறுவனத்திடம் கத்தார் ஏர்வேஸ் 160 விமானங்களுக்கு ஆர்டர் கொடுத்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது மத்திய கிழக்கு பயணத்தின் போது, விமான உற்பத்தியில் உலகின் மிகப்பாரிய வர்த்தக ஒப்பந்தமாக கருதப்படும் 200 பில்லியன் டொலர் மதிப்புள்ள Boeing ஒப்பந்தத்திற்கு சாட்சியமாக இருந்தார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ், கத்தார் அரசின் கீழ் இயங்கும் Qatar Airways, அமெரிக்க விமான தயாரிப்பு நிறுவனமான Boeing-இனிடமிருந்து 160 புதிய விமானங்களை வாங்க உள்ளது.
“இது 200 பில்லியன் டொலரை தாண்டும், ஆனால் 160 விமானங்கள் என்பதே முக்கியம். இது ஒரு சாதனை!” என ட்ரம்ப் தெரிவித்தார்.
இந்த ஒப்பந்தத்தில் Boeing CEO கெல்லி ஓர்ட்பெர்க் மற்றும் Qatar Airways CEO பத்ர் அல்-மீர் ஆகியோர் கையெழுத்திட்டனர்
Doha நகரில் உள்ள அமிரி திவானில், ட்ரம்புக்கு முழு அரசு மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த வர்த்தக ஒப்பந்தம், ட்ரம்பின் கத்தார் பயணத்தில் முக்கியத்துவமான நிகழ்வாக அமைந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |