ராணியார் நல்லடக்கம்... இன்னும் 7 நாட்கள் துக்கமனுசரிக்கும் ராஜகுடும்பம்: வெளியான காரணம்
ராஜகுடும்பமானது தங்கள் தனிப்பட்ட துக்கமனுசரிப்பை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அறிவிக்கப்பட்டுள்ள 7 நாள் துக்கமனுசரிப்பானது ராஜகுடும்பத்து உறுப்பினர்களுக்காக மட்டுமே.
பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத் திங்கட்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்ட நிலையில், மேலும் 7 நாட்கள் துக்கமனுசரிக்க உள்ளனர் மன்னர் உட்பட்ட ராஜகுடும்பத்தினர்.
ராணியார் காலமானதை அடுத்து நாடு முழுவதும் துக்கமனுசரிப்பு முன்னெடுக்கப்பட்டது. அவரது இறுதிச்சடங்குகள் செப்டம்பர் 19ம் திகதி முன்னெடுக்கப்பட்ட நிலையில், தேசிய துக்கமனுசரிப்பும் முடிவுக்கு வந்துள்ளது.
@skynews
ஆனால் ராஜகுடும்பமானது தங்கள் தனிப்பட்ட துக்கமனுசரிப்பை முன்னெடுக்க இருப்பதாக தெரிவித்துள்ளனர். குறித்த விதியை மன்னர் சார்லஸ் அறிவித்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனால் ராணியாருக்கான துக்கமனுசரிப்பு நாட்கள் 17 என அதிகரித்துள்ளது. ராணியாரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டதை அடுத்து, பிரித்தானியா மெதுவாக சாதாரண நிலைக்கு திரும்பியுள்ளது.
@getty
கடைகள், பாடசாலைகள் மற்றும் பல்பொருள் அங்காடிகள் அனைத்தும் பொதுவாக திறக்கும் நேரத்தில் திறந்து செயல்பட துவங்கியுள்ளன. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள 7 நாள் துக்கமனுசரிப்பானது ராஜகுடும்பத்து உறுப்பினர்களுக்காக மட்டுமே.
அத்துடன் ராஜகுடும்பத்து ஊழியர்கள், பிரதிநிதிகள் உட்பட அனைவருக் பின்பற்ற உள்ளனர். பொதுவாக தேசிய துக்கமனுசரிப்பானது 10 நாட்களில் முடிவுக்கு வரும், ஆனாலும் ராஜகுடும்பம் முடிவு செய்தால் இதன் எண்ணிக்கை நீளும் என்றே கூறப்படுகிறது.
@getty
இளவரசர் பிலிப் காலமான போது, அவருக்காக இரண்டு வார காலம் துக்கமனுசரிக்க உத்தரவிட்டார் ராணியார் இரண்டாம் எலிசபெத் என்பது குறிப்பிடத்தக்கது.