ரஷ்ய ஏவுகணைகளால் எவ்வளவு விரைவாக முக்கிய நகரங்களை தாக்க முடியும்... முழுமையான தகவல்
ரஷ்யா - உக்ரைன் போர் எப்போது வேண்டுமானாலும் உலகப் போராக வெடிக்கும் சூழல் உருவாகியுள்ள நிலையில், விளாடிமிர் புடினின் ஏவுகணைகள் எவ்வளவு விரைவாக முக்கிய ஐரோப்பிய நகரங்களை அடைய முடியும் என்ற பீதியை ஏற்படுத்தும் தகவல் வெளியாகியுள்ளது.
வெறும் 20 நிமிடங்களே
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தமது அணு ஆயுத விதிகளை தளர்த்தி, போருக்கான ஆயத்தங்களை முன்னெடுத்து வருகிறார் என்றே தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன், உக்ரைனுக்கு ஆதரவான ஐரோப்பிய நாடுகள் மீது அவர் கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
பிரித்தானியாவின் சக்திவாய்ந்த Storm Shadow ஏவுகணைகளை ரஷ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன்படுத்தியதை அடுத்தே, புடின் ஐரோப்பா மீது குறி வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அத்துடன் ரஷ்ய தூதரான Andrei Kelin தெரிவிக்கையில், உக்ரைன் போரில் பிரித்தானியா நேரிடையாக களமிறங்கியுள்ளது என்றார். இந்த நிலையிலேயே, ரஷ்யாவின் ஏவுகணைகள் தொடர்பில் நிபுணர்கள் தரப்பு வெளியிட்ட தகவல்கள் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
ரஷ்ய ஏவுகணைகள் பாரிஸ் மற்றும் லண்டன் போன்ற தலைநகரங்களைத் தாக்க வெறும் 20 நிமிடங்களே எடுத்துக்கொள்ளும் என்றும் பெர்லின் அல்லது வார்சாவைத் தாக்குவதற்கு இன்னும் குறைவான நேரமே, அதாவது 12 முதல் 15 நிமிடங்களேத் தேவைப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
எவராலும் தடுக்க முடியாதவை
மேலும், ஐரோப்பாவின் முக்கிய நகரங்களை ரஷ்யாவின் Oreshnik ஏவுகணை தாக்கும் நேரங்களைக் காட்டும் புதிய வரைபடம் ஒன்றையும் ரஷ்ய ஊடகம் வெளியிட்டுள்ளது.
Oreshnik என்ற ஹைப்பர்சோனிக் பாலிஸ்டிக் ஏவுகணையானது எவராலும் தடுக்க முடியாதவை என்றே குறிப்பிடப்படுகிறது. மட்டுமின்றி, உலகில் எந்த நாடும் இதுபோன்றதொரு ஆயுதத்தை தங்கள் வசம் வைத்திருக்கவில்லை என்றும் விளாடிமிர் புடின் பெருமையுடன் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், Oreshnik ஏவுகணைகளை பெரும் எண்ணிக்கையில் தயாரிக்கவும் புடின் உத்தரவிட்டுள்ளார். இதனிடையே ரஷ்ய தூதரான Andrei Kelin குறிப்பிடுகையில், உக்ரைன் - ரஷ்ய மோதலை அமெரிக்கா, பிரான்ஸ் மற்றும் பிரித்தானிய நாடுகளே மோசமடையச் செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |