53 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது RAF ஜெட் விமானங்கள்: ஹெப்ரைட்ஸ் வான்பரப்பில் பிரம்மாண்ட பயிற்சி
RAF ஜெட் விமானங்கள் வான்பரப்பில் 53 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது.
டைபூன் மற்றும் லைட்னிங் ஆகிய போர் விமானங்களும் சோதனை பயிற்சியில் கலந்து கொண்டது.
மூன்று RAF விமானநிலையங்களில் இருந்து புறப்பட்ட டைபூன் மற்றும் லைட்னிங் ஜெட் விமானங்கள் வான்பரப்பில் 53 ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளன.
கடந்த மாதம் ஸ்காட்லாந்தின் மூன்று RAF விமானநிலையங்களில் இருந்து டைபூன் மற்றும் லைட்னிங் ஆகியவற்றை உள்ளடக்கிய போர் விமானங்கள் ஹெப்ரைட்ஸ் (Hebrides) வான்பரப்பில் மிகப் பெரிய சோதனை பயிற்சியில் ஈடுபட்டனர்.
இதில் RAF ஜெட் விமானங்கள் மிகப்பெரிய ஏவுகணைத் தாக்குதல் பயிற்சியை நடத்தியதில் 53 ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது.
ஸ்காட்லாந்தில் உள்ள ஹெப்ரைட்ஸ் ஏர் வெப்பன் ரேஞ்ச்களில் 10 நாட்களுக்கு மேல் நடைபெற்ற, எட்டு வெவ்வேறு படை பிரிவுகளைச் சேர்ந்த விமானிகள் டஜன் கணக்கான இலக்கு ட்ரோன்களை கடலுக்கு மேல் வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தினர்.
இந்த சோதனை பயிற்சியில் டைபூன்(Typhoon) மற்றும் லைட்னிங்(Lightning) ஜெட் விமானங்கள் ஈடுபட்டு இருந்தன, இதில் விமானிகள் அகச்சிவப்பு- வழிகாட்டப்பட்ட ஏவுகணைகளை பயன்படுத்தி இலக்கு தாக்கி அழிக்கும் உண்மையான அனுபவத்தை பெறும் வகையில் பயிற்சி வடிவமைக்கப்பட்டு இருந்தது.
கூடுதல் செய்திகளுக்கு: விமானப் பயணிகளுக்கு அதிர்ச்சியளித்த போரிஸ் ஜான்சன்: அவசரகதியில் லண்டனுக்கு பயணம்
இது தொடர்பாக பயிற்சியில் ஈடுபட்டு இருந்த விமானி ஒருவர் தெரிவித்த கருத்தில் ஏவுகணைகளை ஏவிய அனுபவத்தை அருமையானது என்று விவரித்தார், அத்துடன் டைஃபூனில் எனது முதல் நேரடி துப்பாக்கிச் சூடு பயிற்சி என்னவாக இருக்கும் என்ற எனது எதிர்பார்ப்புகளை இது தாண்டியது என தெரிவித்துள்ளார்.