உக்ரைன் வான்பரப்பில் முதன்முறையாக..ரஷ்ய ட்ரோன்களை சுட்டுவீழ்த்திய RAF
நேட்டோ ரோந்து பணியில் இருந்த RAF, முதன் முறையாக உக்ரைன் வான்பரப்பில் பறந்த ரஷ்ய ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியுள்ளது.
டானூப் நதிக்கரையில்
உக்ரைனில் உள்ள டானூப் நதிக்கரையில் அமைந்துள்ள துறைமுகங்கள் மீது விளாடிமிர் புடினின் படைகள் தாக்குதல் நடத்தின.

அதனைத் தொடர்ந்து, ருமேனியாவில் இருந்து இரண்டு ராயல் ஏர் ஃபோர்ஸ் யூரோஃபைட்டர் விமானங்கள் அவசரமாக அனுப்பப்பட்டன.
ருமேனிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம்
இந்த நிலையில், உக்ரைன் வான்பரப்பில் ரஷ்ய ட்ரோன்களை தாக்கி வீழ்த்தியதாக ருமேனிய தேசிய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக Bucharest வெளியிட்ட அறிக்கையில், "ஏப்ரல் 25, சனிக்கிழமை காலை, உக்ரைனில் உள்ள துல்சியா கவுண்டியில், ருமேனியாவுடனான ஆற்று எல்லைக்கு அருகில் பொதுமக்கள் மற்றும் உள்கட்டமைப்பு இலக்குகள் மீது ரஷ்யப் படைகள் ட்ரோன் தாக்குதல்களை மீண்டும் தொடங்கின" என கூறப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய கொடூரமான இரவு நேரத் தாக்குதல்களால், ருமேனியா மற்றும் போலந்து ஆகிய இரு நாடுகளில் இருந்தும் நேட்டோ போர் விமானங்களை அவசரமாக அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்ட நிலையில் இது நிகழ்ந்துள்ளது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |