அமெரிக்காவின் கடும் அழுத்தம்: கண்டுகொள்ளாத இஸ்ரேல்: திண்டாடும் ரஃபா மக்கள்
ரஃபா பகுதியில் இருந்து குடிமக்கள் விரைவாக வெளியேறுமாறு இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
அமெரிக்காவின் கடும் எதிர்ப்பு
இஸ்ரேல்-ஹமாஸ் படைகளுக்கு இடையிலான போர் நடவடிக்கை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பு சம்மதம் தெரிவித்தும் இஸ்ரேல் விடாமல் தரை மற்றும் வான்வழி தாக்குதலை முன்னெடுத்து வருகிறது.
இதற்கிடையில் மனிதாபிமான வழியின் முக்கிய மூலோபாய நகரான ரஃபா மீது தாக்குதலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை இஸ்ரேல் செயல்படுத்தாத நிலையில், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தேவையான வெடிகுண்டு மற்றும் ஆயுதங்களை வழங்காமல் இடை நிறுத்தியுள்ளது.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனும் பாலஸ்தீனத்தின் ரஃபா நகரத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இருப்பினும் கிட்டத்தட்ட 1.4 மில்லியன் மக்கள் தஞ்சம் அடைந்துள்ள தெற்கு நகரான ரஃபா மீது தாக்குதல் நடத்த இருப்பதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.
குடிமக்கள் வெளியேற உத்தரவு
இந்நிலையில் ரஃபாவின் பல பகுதியில் உள்ள குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அவர்கள் விரைவாக விரிவாக்கப்பட்ட மனிதாபிமான பகுதிக்கு சென்று விடுமாறும் இஸ்ரேல் அழைப்பு விடுத்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |