270க்கும் மேற்பட்ட மரணங்கள்! ஒடிசா ரயில் விபத்து தொடர்பில் இதை செய்ய வேண்டும்..ராகுல் காந்தி வலியுறுத்தல்
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஒடிசா ரயில் விபத்து தொடர்பில், ரயில்வே அமைச்சரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
275 பேர் பலி
ஒடிசா ரயில் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் உலுக்கியது. இதில் 275 பேர் உயிரிழந்தனர், மேலும் 1,100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்தார். அதன் பின்னர் சீரமைப்புப் பணிகள் துரிதகதியில் நடைபெற்று வருவதாக அமைச்சர் கூறினார்.
ராகுல் காந்தி ட்வீட்
இந்த நிலையில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிரதமரை வலியுறுத்தி ட்வீட் செய்துள்ளார்.
அதில், '270க்கும் மேற்பட்ட இறப்புகளுக்கும் பொறுப்புக்கூறல் இல்லை! இத்தகைய வேதனையான விபத்துக்குப் பொறுப்பேற்று மோடி அரசு ஓடிவிட முடியாது. ரயில்வே அமைச்சரை பிரதமர் உடனடியாக பதவி நீக்கம் செய்ய வேண்டும்!' என வலியுறுத்தியுள்ளார்.
270+ मौतों के बाद भी कोई जवाबदेही नहीं!
— Rahul Gandhi (@RahulGandhi) June 4, 2023
मोदी सरकार इतनी दर्दनाक दुर्घटना की ज़िम्मेदारी लेने से भाग नहीं सकती।
प्रधानमंत्री को फ़ौरन रेल मंत्री का इस्तीफा लेना चाहिए!