தலித் வீட்டில் உணவு சமைத்து சாப்பிட்ட ராகுல் காந்தி.., வைரலாகும் புகைப்படம்
தலித் சமூகத்தை சேர்ந்த ஒருவரது வீட்டில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உணவு சமைத்து சாப்பிட்ட சம்பவம் பேசப்பட்டு வருகிறது.
உணவு சமைத்த ராகுல் காந்தி
இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, கோலாப்பூரில் உள்ள கிராமத்தில் வசிக்கும் தலித் சமூகத்தை சேர்ந்த தம்பதியினர் அஜய் துக்காராம் சனதே மற்றும் அஞ்சனா.
இவர்களது வீட்டிற்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி திடீரென சென்றுள்ளார். அங்கு அவர்களுடன் கலந்துரையாடினார்.
பின்னர், அவரது வீட்டில் தலித்துகள் வழக்கமாக பாரம்பரிய முறைப்படி தயாரிக்கும் உணவை ராகுல் காந்தி சமைத்தார். அப்போது, எப்படி சமைப்பது என்று அவர்களிடம் கேட்டு சமைத்துள்ளார்.
கத்தரிக்காய், கீரை, துவரம் பருப்பு போட்டு ‘ஹர்பர் யாச்சி பாஜி’ என்ற உணவை அவர்களுடன் சேர்ந்து சமைத்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "தலித்துகள் என்ன சாப்பிடுகிறார்கள் என்பது யாருக்கும் தெரியாது" என்று சமூக ஆர்வலர் ஷாஹு கூறிய கருத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "தன்னுடைய வீட்டிற்கு வரவேண்டும் என்று அஜய் என்னை மரியாதையுடன் அழைத்தார். அவரது அழைப்பை ஏற்று அவரது வீட்டிற்கு சென்றேன். என்னை சமைக்கவும் அனுமதித்தார்.
தலித் என்பதால் புறக்கணிப்பு போன்ற பல்வேறு அனுபவங்களை அஜய் குடும்பத்தாரிடம் கேட்டறிந்தேன்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |