Stock market, Mutual Fund -ல் கோடிக்கணக்கில் முதலீடு.., ராகுல்காந்தியின் மொத்த சொத்து மதிப்பு
மக்களவை தேர்தலில் போட்டியிடும் ராகுல்காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ள நிலையில் அவருடைய சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன.
ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு
இந்திய மாநிலமான கேரளாவில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 26 -ம் திகதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், ஏப்ரல் 4 -ம் திகதி வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடைசி நாள் என்றும் இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.
இந்நிலையில் நேற்று, வயநாடு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி சொத்து மதிப்பு குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.
* பங்குச் சந்தை (Stock market) முதலீடாக ரூ. 4.3 கோடி, பரஸ்பர நிதி முதலீடு என்னும் மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) முதலீடாக ரூ.3.81 கோடி வைத்துள்ளார்.
* வங்கிக் கணக்கில் ரூ.26.25 லட்சம் மற்றும் கையிருப்பில் ரூ.55,000 ரொக்கமாகவும் வைத்துள்ளார்.
* 2022-23 -ம் நிதியாண்டில் ராகுல் காந்தியின் மொத்த வருமானம் ரூ.1.02 கோடி.
* அசையும் சொத்துக்களாக ரூ.9.24 கோடி வைத்துள்ளார். இதில் ரூ.15.2 லட்சம் மதிப்புள்ள தங்க பத்திரங்களும் (Gold bonds ) அடங்கும்.
* அசையா சொத்துக்களாக ரூ.11.15 கோடி வைத்துள்ளார்.
* தேசிய சேமிப்புத் திட்டங்கள், அஞ்சல் சேமிப்பு, காப்பீட்டுக் கொள்கைகள் உள்ளிட்டவற்றில் ரூ.61.52 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
* டெல்லியில் உள்ள பிரியங்கா காந்தியின் ரூ.11 கோடி மதிப்புள்ள அலுவலக இடத்தில் இவருக்கு பங்கு உள்ளது.
* ஆண்டு வருமானம் ரூ.1 கோடிக்கு மேல் எனவும், மொத்த சொத்து மதிப்பு ரூ.20.4 கோடி எனவும் குறிப்பிட்டுள்ளார்.
* கடனாக ரூ.49.7 லட்சம் மற்றும், தன் மீது 18 வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |