திருப்பதி லட்டுவை போலவே வைரலாகும் ராகுல் காந்தியின் ஜிலேபி விவகாரம்
திருப்பதி லட்டுவில் கொழுப்பு பொருட்கள் கலந்ததாக பெரும் சர்ச்சை உருவான நிலையில், ராகுல் காந்தியின் ஜிலேபி விவகாரம் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
ஜிலேபி விவகாரம்
திருப்பதி திருமலை கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் மாட்டின் கொழுப்பு கலந்த நெய் கலப்படம் செய்யப்பட்டதாக வெளியான விவகாரம் பெரும் சர்ச்சையாக மாறியது.
தற்போது, இந்த விவகாரம் உச்சநீதிமன்றம் வரைக்கும் சென்று விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தல் பரப்புரையில் ஜிலேபி குறித்து மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.
அவர் பேசுகையில், "தான் தரமான ஜிலேபியை சாப்பிட்டதாகவும், ஹரியானாவின் ஜிலேபியை உலகம் முழுவதும் கொண்டு செல்லலாம். ஜிலேபியின் உற்பத்தியை அதிகரிப்பதன் மூலமாக வேலைவாய்ப்பை அதிகரிக்கலாம்.
ஆனால், அதற்கான கடன் உதவியை மோடி அரசு வழங்குவதில்லை" என்று கூறியிருந்தார். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் மீண்டும் 3 -வது முறையாக பாஜக ஆட்சியை பிடித்துள்ளது.
இதனால், ராகுல் காந்தியின் வீட்டுக்கு சுமார் ரூ.600 மதிப்புள்ள ஒரு கிலோ ஜிலேபியை பார்சலாக பாஜக அனுப்பி வைத்துள்ளது. மேலும், போபாலில் பாஜகவினர் ஜிலேபியை வழங்கி தங்களது வெற்றியை கொண்டாடுகின்றனர்.
அதுமட்டுமல்லாமல், லக்கிம்பூர் பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திற்கு சென்ற பாஜக தொண்டர் அங்குள்ள நிர்வாகிகளுக்கு ஜிலேபியை வழங்கியுள்ளார்.
அதோடு, சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக ஜிலேபியை வைத்து மீம்ஸ்களும் பரவி வருகின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |