மோடி அரசு மக்களால் புறக்கணிக்கப்பட்டுள்ளது..!ராகுல் காந்தி பேச்சு
மக்களால் புறக்கணிக்கப்பட்டது மோடி அரசு என்று தேர்தல் முடிவுகளை குறிப்பிட்டு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்ற தேர்தல்
இந்திய நாடாளுமன்ற தேர்தலின் வாக்குப்பதிவு முடிவுகள் கிட்டத்தட்ட வெளியாகி இருக்கும் நிலையில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில் 292 தொகுதிகளில் NDA கூட்டணியும், 233 தொகுதிகளில் INDIA கூட்டணியும் வெற்றி பெற்ற உள்ளது.
இந்நிலையில் காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் காந்தி கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தியுடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
बेशुमार मोहब्बत देने के लिए वायनाड और रायबरेली की जनता का बहुत बहुत धन्यवाद।
— Rahul Gandhi (@RahulGandhi) June 4, 2024
अगर मेरे बस में होता, तो मैं दोनों ही जगह का सांसद बने रहना पसंद करता। pic.twitter.com/Hke2ecdGki
அப்போது, இந்த தேர்தலில் இந்தியா கூட்டணி அரசியல் சாசனத்தை காக்க போராடியதாகவும், மக்கள் மோடி தலைமையிலான அரசை மக்கள் புறக்கணித்துள்ளனர் என்றும் ராகுல் காந்தி தெரிவித்தார்.
அத்துடன் இந்தியா கூட்டணி கட்சிகளின் கூட்டம் நாளை நடைபெறும், நாங்கள் எதிர்க்கட்சி இருக்கையில் இருக்கிறோமா அல்லது வேறு முயற்சிகளை செய்ய விரும்புகிறோமா என்று கூட்டணி கட்சியுடன் பேசி, அவர்களின் கருத்துக்கு மதிப்பு அளித்து முடிவு செய்வோம் என்று தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |