அப்பாவுடன் இருக்கும் ராகுல் காந்தி.., AI தொழில்நுட்பத்தால் வைரலாகும் புகைப்படம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் மறைந்த தலைவர் ராஜீவ் காந்தியுடன் அவரது மகன் ராகுல் காந்தி இருக்கும் புகைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.
AI தொழில்நுட்பம்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் (AI) மூலம் பல்வேறு துறைகள் பல வளர்ச்சிகள் அடைந்துள்ளன. அமெரிக்காவில் நீதிமன்றத்தில் வாதாடுவதற்கு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ரோபோ வக்கீல்கள் அறிமுகம் செய்யப்பட்டது.
மேலும், அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது உருவத்தை விர்ச்சுவலாக்கி அதன் மூலம் டேட்டிங் தளம் உருவாக்கி வாடிக்கையாளர்களை பேசி பழக வைத்து சம்பாதித்து வருகிறார்.
நியூயார்க்கில் உள்ள ஒரு பெண் ஒருபடி மேலே சென்று தனது கணவரை செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கி அதனுடன் பேசி வருகிறார்.
இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் கோட் திரைப்படத்தில் ஏஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகர் விஜயகாந்தை கொண்டு வந்தனர்.
திமுக முப்பெரும் விழா மற்றும் பவள விழாவில், ஏஐ தொழில்நுட்பம் மூலம் கருணாநிதி தோன்றி தனது குரலில் உரையாற்றினார்.
அதேபோல, மறைந்த இங்கிலாந்து ராணி எலிசபெத், முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, சட்டமேதை அம்பேத்கர், அப்துல்கலாம், தொழிலதிபர் ரத்தன் டாடா போன்றவர்கள் மூலம் தோன்றிய கேரல்ஸ் பாடல் வைரலானது.
அந்தவகையில், தற்போது முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் அவருடைய மகனான ராகுல்காந்தி அமர்ந்து இருப்பது போன்று ஏ.ஐ. தொழில் நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |