செருப்பு தைக்கும் தொழிலாளி அனுப்பி வைத்த காலணி.., மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்ட ராகுல் காந்தி
செருப்பு தைக்கும் தொழிலாளி அனுப்பி வைத்த காலணியை ராகுல் காந்தி மகிழ்ச்சியுடன் அணிந்து கொண்டுள்ளார்.
செருப்பு தைக்கும் தொழிலாளி
இந்திய மாநிலமான உத்தர பிரதேசம், சுல்தான்பூரில் வசிக்கும் காலணி தைக்கும் தொழிலாளி ராம் சைத். இவர், ஏழ்மையின் காரணமாக தனக்கு உதவி செய்ய வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு தகவல் தெரிவித்திருந்தார்.
இதன்பின்னர், அமித் ஷா குறித்து அவதூறாக பேசியதாக தொடர்ந்த வழக்கில், கடந்த 26-ம் திகதி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி ஆஜரானார்.
அப்போது, நீதிமன்றம் செல்லும் வழியில் ராம் சைத் வீட்டின் அருகே காரை நிறுத்தி அவரை சந்தித்தார். அவரது குடும்பத்தினருடன் 30 நிமிடங்கள் ராகுல் காந்தி உரையாடினார்.
பின்னர், அவருடன் சேர்த்து காலணி ஒன்றையும் தைத்தார். இதையடுத்து அவரது ஏழ்மை நிலைமையை குறித்து கேட்டறிந்தார்.
பின்னர், உதவி செய்வதாக கூறிவிட்டு கிளம்பி சென்றார். அடுத்த ஒரு சில தினங்களிலே அவருக்கு காலணி தைக்கும் இயந்திரத்தையும் அனுப்பி வைத்தார்.
ராகுல் காந்தி
இதனால், 2 ஜோடி காலணிகளை ராகுல் காந்திக்கு செருப்பு தைக்கும் தொழிலாளி பரிசாக அனுப்பி வைத்தார். இதையடுத்து, காலணி தைக்கும் தொழிலாளி ராம் சைத் அன்புடன் அனுப்பிய காலணிகளை ராகுல் காந்தி அணிந்து கொண்டுள்ளார்.
பின்னர், எனக்காக அழகான காலணிகளை தைத்து அனுப்பியுள்ளீர்கள் என்று தொலைபேசி வாயிலாக அவருக்கு ராகுல் காந்தி நன்றி தெரிவித்தார். இது சம்மந்தமான வீடியோவையும் ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
कामगार परिवारों के ‘परंपरागत कौशल’ में भारत की सबसे बड़ी पूंजी छिपी है।
— Rahul Gandhi (@RahulGandhi) August 5, 2024
पिछले दिनों सुल्तानपुर से वापस आते वक्त रास्ते में जूतों के कारीगर रामचेत जी से मुलाकात हुई थी, उन्होंने मेरे लिए प्रेम भाव से अपने हाथों से बनाया एक बहुत ही कम्फर्टेबल और बेहतरीन जूता भेजा है।
देश के… pic.twitter.com/4juRQBrXb1
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |