தண்டவாளத்தில் விழுந்த நபரை நொடிகளில் காப்பாற்றிய ரயில்வே ஊழியர்! இணையத்தில் பரவும் சிசிடிவி வீடியோ
மேற்கு வங்கத்தில் ரயில் தண்டவாளத்தில் கிடந்த நபரை ரயில்வே ஊழியர் ஒருவர் உயிரைப் பணயம் வைத்து சில நொடிகளில் காப்பாற்றியுள்ளார்.
இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. எதிரே வந்த ரயில் வேகமாக வருவதற்கு சில வினாடிகளுக்கு முன்பு ரயில் தண்டவாளத்தில் இருந்த அந்த நபரை ரயில்வே ஊழியர் காப்பாற்றினார்.
24 வினாடிகள் ஓடும் இந்த வீடியோவில் ரயில்வே ஊழியர் பிளாட்பாரத்தில் நடந்து செல்வதைக் காட்டுகிறது. அப்போது தண்டவாளத்தில் விழுந்து கிடந்த நபரை பார்த்துவிட்டு வேகமாக ஓடிச்சென்று, தண்டவாளத்தில் குதித்து, சரியான நேரத்தில் பாதையின் மறுபக்கத்திற்கு தூக்கிச் சென்றார். அடுத்த சில நொடிகளில் சரக்கு ரயில் அவர்களைக் கடந்து செல்கிறது.
இதையும் படிங்க: கந்தல் பொம்மையை திருமணம் செய்த பெண்ணுக்கு குழந்தை..!
Beyond the call of duty. Sh. H. Satish Kumar, Pointsman-A, posted at Balichak/ Kharagpur Division has saved a life showing exemplary courage. Salute to him @IRTSassociation @DKharagpur pic.twitter.com/bv2c9IaNhW
— Vikas Kumar IRTS (@IRTS_VIKAS) June 23, 2022
இந்நிலையில், ரயில்வே ஊழியரின் துணிச்சலை பல சமூக வலைத்தள பயனர்கள் பாராட்டி வருகின்றனர். அந்த ஊழியர் எச்.சதீஷ் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: 10 வினாடிகள் ஒற்றைக் காலில் நிற்க முடியவில்லையா.., மரண எச்சரிக்கை விடுக்கும் ஆய்வு
இந்த விடியோவை ட்விட்டரில் பகிர்ந்த ரெயில்வே அமைச்சகம், "பணியில் இருந்த ஊழியர்களின் துணிச்சலான உதவியால் ஒரு விலைமதிப்பற்ற உயிர் காப்பாற்றப்பட்டது, அவர் ஒருவரை கடுமையாக காயமடையாமல் காப்பாற்ற தண்டவாளத்தில் குதித்தார்.
இந்திய ரயில்வே எச். சதீஷ் குமார் போன்ற துணிச்சலான மற்றும் விடாமுயற்சியுள்ள ஊழியர்களைக் கொண்டிருப்பதில் பெருமிதம் கொள்கிறது மற்றும் அவரது துணிச்சலைப் பாராட்டுகிறது" என்று பதிவிட்டுள்ளது.
Beyond the call of duty. Sh. H. Satish Kumar, Pointsman-A, posted at Balichak/ Kharagpur Division has saved a life showing exemplary courage. Salute to him @IRTSassociation @DKharagpur pic.twitter.com/bv2c9IaNhW
— Vikas Kumar IRTS (@IRTS_VIKAS) June 23, 2022