தமிழகத்தில் இன்று வெளுக்க போகும் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?
தமிழகத்தில் இன்று (டிச.19) தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்துள்ளது.
8 மாவட்டங்களில் கனமழை
லட்சத்தீவை ஒட்டியுள்ள பகுதியில் ஏற்பட்டுள்ள வளிமண்டல சுழற்சி காரணமாக, தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
இதனால் அந்த பகுதி முழுவதுமே வெள்ளக்காடாக காட்சி அளித்துக்கொண்டிருக்கிறது. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து விட்டதால், மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
PTI
இந்நிலையில், தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதன் படி, தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்து இருக்கிறது.
நேற்று குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல சுழற்சி, இன்று லட்சத்தீவு மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று (டிச.19) தென்தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிவித்து இருக்கிறது.
மேலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வருகிற 21-ம் திகதி தென் தமிழகம் மற்றும் வட தமிழக பகுதிகளில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |