அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்- வானிலை மையம்
அடுத்த 3 மணி நேரத்திற்கு 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வானிலை மையம் கூறியதாவது..,
குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காணப்படுகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் முன்னதாக தெரிவித்திருந்தது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 19, 2024
இந்நிலையில், அடுத்த 3 மணி நேரத்திற்கு நாகப்பட்டினம், திருவாரூர் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
மேலும், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |