தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு தொடரும் கனமழை.., எந்தெந்த பகுதியில்?- இந்திய வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என இந்திய வானிலை மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது..,
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து தீவிரமாகவே உள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக வடகிழக்கு பருவமழை ஜனவரியிலும் பெய்து வருகிறது.
எனவே, இரண்டு நாட்களுக்கு வடகிழக்கு பருவமழை படிப்படியாக குறையும், தென்மாவட்டங்களில் மழை நீடிக்கும்.
PTI
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுபோன்று, அடுத்த 24 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், தூத்துக்குடி, விருதுநகர், நெல்லை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.
IANS
மேலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒருசில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அதி கனமழைக்கு வாய்ப்பில்லை எனவும் தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |