உடல் எடையை குறைக்கும் உலர் திராட்சை தண்ணீர் - எப்படி தெரியுமா?
பொதுவாகவே அனைவருக்கும் தங்களது உடலை அழகாகவும் சீராகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் ஒரு சில விடயத்தின் காரணமாக உங்களுடைய உடலின் எடையானது சீக்கிரமாக அதிகரித்து விடும்.
அதற்கு என்ன செய்யலாம் என யோசித்துக்கொண்டு இருப்பவரா நீங்கள்? உங்களுக்கான சிறந்த தீர்வு தான் இந்த உலர் திராட்சை தண்ணீர். இது எப்படி உடல் எடையை குறைப்பதற்கு உதவுகிறது என்பது குறித்து பார்க்கலாம்.
உங்கள் உணவில் திராட்சை தண்ணீரைச் சேர்த்து, தினமும் அதை உட்கொள்வதால் நம்பமுடியாத பல நன்மைகளை பெறுவீர்கள்.
திராட்சை நீர் என்றால் என்ன?
திராட்சை நீர் என்பது கிஷ்மிஷ் என்று அழைக்கப்படும் திராட்சையும் தண்ணீரும் ஒரே இரவில் ஊற வைக்கப்படுவதாகும். தண்ணீரை முதலில் கொதிக்க வைத்து, திராட்சையும் சேர்த்து, இரவு முழுவதும் ஊறவைக்கவும். மறுநாள் காலை அதை வடிக்கட்டவும்.
உலர் திராட்சையின் ஊட்டச்சத்துக்கள்
கை அளவு உலர் திராட்சையில் 108 கலோரிகள், 29 கிராம் கார்போஹைட்ரேட், ஒரு கிராம் புரதச்சத்து, 21 கிராம் சர்க்கரை, ஒரு கிராம் நார்ச்சத்து உள்ளிட்டவை காணப்படுகிறது.
எப்படி தயாரிப்பது?
தேவையான பொருட்கள்
- உலர்ந்த திராட்சைகள்
- எலுமிச்சை பழம்
- இரண்டு கிளாஸ் தண்ணீர்
செய்முறை
-
முதலில் இரண்டு கப் தண்ணீரில் 150 கிராம் உலர் திராட்சைகளை சேர்த்து கொதிக்க வைக்கவும். பின் இரவு முழுவதும் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.
- மறுநாள் வடிகட்டி எடுத்து சூடுப்படுத்தி வெறும் வயிற்றில் குடிக்கலாம்.
- உங்களுக்கு சுவையாக வேண்டுமென்றால் எலுமிச்சை சாறும் கலந்துக்கொள்ளலாம். இதை குடித்த பிறகு அடுத்த 30 நிமிடங்களுக்கு எந்தவொரு உணவையும் சாப்பிடக் கூடாது.
- இதை தினசரி குடித்து வருவதன் மூலம் உங்கள் எடையை சீக்கிரமாக குறைத்துக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |