தேனிலவுக் கொலை வழக்கு: ஒரு புதிய தகவல்
இந்தியாவின் மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு புதுமணத்தம்பதி தேனிலவுக்குச் சென்ற நிலையில், மணமகன் சடலமாக மீட்கப்பட்ட வழக்கில் புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
தேனிலவு கொலை வழக்கு
மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த ராஜா ரகுவன்ஷியும் அவரது மனைவியான சோனம் ரகுவன்ஷியும் (25) சென்ற மாதம் மேகாலயாவுக்கு தேனிலவுக்காக சென்றிருந்த நிலையில், மர்மமான முறையில் காணாமல் போன ராஜா பின்னர் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார்.
ராஜா கொலை தொடர்பாக அவரது மனைவியான சோனம், சோனமுடைய காதலரான ராஜ் குஷ்வாஹா, அவரது நண்பர்களான விஷால் சௌகான், ஆனந்த் குமார், ஆகாஷ் தாக்கூர், அவர்களுக்கு உதவிய ஜேம்ஸ் (Silome James), லோகேந்திர சிங் (Lokendra Singh Tomar) மற்றும் பல்வீர் (Balvir Ahirwar) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
புதிய தகவல் ஒன்று
இந்நிலையில், கொல்லப்பட்ட ராஜாவின் சகோதரரான விபின் ரகுவன்ஷி புதிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது, சோனமுடைய குடும்பத்தினர், தங்களுக்கும் ராஜா கொலைக்கும் சம்பந்தம் இல்லை என்று கூறியிருந்தார்கள்.
ஆனால், சமீபத்தில் லீக்கான தொலைபேசி உரையாடல் ஒன்றிலிருந்து, சோனம் தன் குடும்பத்தினருடன் கடந்த நான்கு வாரங்களில் நான்கு அல்லது ஐந்து முறை பேசியது தெரியவந்துள்ளதாக விபின் தெரிவித்துள்ளார்.
ஆக, சோனமுக்கு மட்டுமல்ல அவரது மொத்தக் குடும்பத்துக்கும் ராஜா கொலையில் தொடர்பிருக்கலாம் என சந்தேகம் எழுப்பியுள்ள அவர், குற்றவாளிகள் ஜாமீன் பெற முயல்வதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கைது செய்யப்பட்டவரக்ளில் ஒருவரான ஜேம்ஸ் ஜாமீன் பெற்றுவிட்ட நிலையில், தற்போது மற்றவர்களும் ஜாமீன் பெற முயல்வதாக தெரிவித்துள்ள விபின், பொலிசார் மீது நம்பிக்கை இல்லை என்றும், சிபிஐ விசாரணை வேண்டும் என்றும் கோரியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |