திருமணத்தன்று காணாமல் போன மணப்பெண்! 13 நாட்கள் மண்டபத்திலே காத்திருந்த மணமகன்
ராஜஸ்தானில் திருமண சடங்குகளுக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மணமகன் காதலனுடன் ஒடிவிட்ட நிலையில், 13 நாட்கள் மணமகன் மண்டபத்தில் காத்திருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்தன்று ஓடிய மணப்பெண்
ராஜஸ்தான் மாநிலத்தின் பாலி மாவட்டம் செளனா கிராமத்தை சேர்ந்த, ஒரு தம்பதியினருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுள்ளது.
@news18
இந்நிலையில் திருமணத்தன்று மண்டபத்தில் அனைவரும் கூடியிருக்க, மணப்பெண் தனக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கிறது என கூறிவிட்டு, தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
@indiatoday
பின்னர் முகூர்த்த நேரம் வரவே மணப்பெண்ணை காணவில்லை என உறவினர்கள் அனைவரும் தேடியுள்ளனர். ஆனால் எங்கு தேடியும் மணமகள் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து மணமகள் திருமணத்தில் விருப்பம் இல்லாமல், தான் வீட்டை விட்டு ஓடியிருக்கிறது என தெரிய வந்துள்ளது.
13 நாட்கள் காத்திருந்த மணமகன்
இதனைக் கேட்டு மனமுடைந்த மணமகன், எப்படியும் மணமகள் வருவாள் என்ற நம்பிக்கையில், மண்டபத்திலேயே காத்திருக்கிறார், ஆனால் மணபெண்ணோ வந்தபாடில்லை.
இதனிடையே மணமகனின் உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் மணமகன் மண்டபத்தை விட்டு வரவில்லை. மேலும் தொடர்ந்து 13 நாட்கள் மணமகன் திருமண தலைப்பாகையை கழற்றாமல் கூட மணமகளுக்காக காத்திருந்திருக்கிறார்.
@getty images
இந்நிலையில் மணமகளை காணவில்லை என அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பொலிஸார், மணமகளை தேடி பிடித்து மீண்டும் அவரது பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.
பின்னர் இரு வீட்டாரும் சமாதானம் அடைந்து மணமகன் காத்திருந்த அதே மண்டபத்தில்,அ மீண்டும் திருமணம் நடைபெற்றுள்ளது.