இலங்கையில் கொல்லப்பட்டவர்களின் ஆன்மா நிம்மதியா வாழ விடாது! வைரலாகும் ரஜினிகாந்த் வீடியோ
இலங்கை போர் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய பழைய வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே விலகிய நிலையில், ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சே பதவி விலகாததால் கொழும்பில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த நிலையில், இலங்கை குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. கடந்த 2008ஆம் ஆண்டு இலங்கையில் யுத்தம் நடந்தபோது, தமிழகத்தில் நடிகர் சங்கம் சார்பில் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டது.
கண்டதும் சுட உத்தரவு: இலங்கை அரசு அதிரடி!
தலைவர் ❤️#Thalaivar169 pic.twitter.com/zw03c9skwi
— கரிகாலன்𓃵 (@senthan_msd) May 10, 2022
அதில் கலந்துகொண்ட நடிகர் ரஜினிகாந்த் பேசியபோது, 'இலங்கை மட்டுமல்ல, எந்த நாடாக இருந்தாலும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் ஏழை மக்கள் வேதனைபட்டால் அந்த நாடு உருப்படாது. இலங்கையில் பெண்களின் உதிரம் கொட்டுகிறது. அங்கு சாகும் மக்களின் பிணங்கள் புதைக்கப்படவில்லை, விதைக்கப்படுகிறது. நீங்கள் யுத்தத்தில் எல்லாரையும் அழித்தாலும், அந்த விதை நாளை வந்து உங்களை நிம்மதியாக வாழ விடாது' என ஆவேசமாக பேசினார்.
இந்த வீடியோவை ரஜினிகாந்தின் ரசிகர்கள், தமிழ் தேசியவாதிகள், நெட்டிசன்கள் என பலரும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
14 ஓவரில் சுருண்டது லக்னோ! அசத்தல் வெற்றியுடன் குஜராத் பிளேஆஃப்ஸ்க்கு தகுதி

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
மரண அறிவித்தல்
திரு சின்னத்துரை செபஸ்தியாம்பிள்ளை
அச்சுவேலி, Markham, Canada, Garges-lès-Gonesse, France
09 May, 2022
மரண அறிவித்தல்
திருமதி சரோஜினிதேவி பாலேந்திரா
தாவடி, எசன், Germany, London, United Kingdom, Birmingham, United Kingdom
11 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் தயானந் பாலசுந்தரம்
துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada
16 May, 2021