வீட்டில் இருந்தப்படியே ஐஸ்கிரீம் விற்பனை செய்த பெண் - தற்போது ரூ. 6,000 கோடி சாம்ராஜியத்திற்கு அதிபதி
ரஜினி பெக்டர் என்ற பெண் வெறும் ரூ.20,000 முதலீட்டில் சிறிய அளவில் ஆரம்பித்த வியாபாரத்தை தற்போது மிகப்பெரிய சாம்ராஜியமாக உருவாக்கியுள்ளார்.
யார் இந்த ரஜினி பெக்டர்?
கடந்த இரண்டு தசாப்தங்களில் கோடீஸ்வர பெண் தலைமை நிர்வாக அதிகாரிகளின் எண்ணிக்கையில் இந்தியா பெரும் எழுச்சியை பெற்றுள்ளது.
இன்று பல பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலகளாவிய நிறுவனங்களுக்கு தலைமை தாங்கும் பல பெண்களும் இருந்து வருகின்றனர்.
அதில் ஒருவர் தான் இந்த ரஜினி பெக்டர். இவர் 1940 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டில் கராச்சி என்ற நகரத்தில் பிறந்து, லாகூரில் வளர்ந்தார்.
இவரது தந்தை கணக்காளராகவும் உறவினர்கள் அரசாங்கத்தில் உயரிய அந்தஸ்த்திலும் பணி புரிந்துள்ளனர்.
1947 ஆம் ஆண்டு நாடு பிரிந்த நேரத்தில், அவரது குடும்பத்தினர் டெல்லியை வந்தடைந்தனர். வெறும் 17 வயதில் லூதியானாவில் வசிக்கும் தரம்வீர் என்பவரை ரஜினி பெக்டர் திருமணம் செய்தார்.
இவருக்கு சமைப்பது மற்றும் விருந்து வைப்பது மிகவும் பிடிக்கும் என்பதால் லூதியானாவில் இருந்த சமையல் படிப்புகளை படித்து முடித்தார்.
அதிலும் குக்கீகள், சாலடுகள், ஐஸ்கிரீம் என்பவற்றை செய்வதில் அதிக விருப்பத்துடன் ஈடுபட்டார்.
அவருடைய குழந்தைகள் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்ததும் வீட்டில் தனியாக நேரத்தைக் கழிப்பதற்கு பதிலாக, தனது வணிக வாழ்க்கையை ஆரம்பிக்க விரும்பினார்.
சில மாணவர்களுக்கு வீட்டில் சமையல் வகுப்புகளை வழங்கத் தொடங்கினார்.
வீட்டில் இருந்தப்படியே ஐஸ்கிரீம் விற்பனை
1978 ஆம் ஆண்டு வெறும் ரூ. 20,000 முதலீட்டில் வீட்டிலேயே ஐஸ்கிரீம் செய்ய ஆரம்பித்தார். வீட்டின் பக்கத்தில் இருக்கும் கடைகளுக்கு ஐஸ்கிரீம்களை வழங்கினார்.
தற்போது ரஜினி பெக்டரின் நிறுவனத்தின் பிஸ்கட்கள், பான்கள் மற்றும் ஐஸ்கிரீம்கள் 60 இற்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
2021 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதையும் இவர் பெற்றுள்ளார்.
மேலும் 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி ரூ. 6681 கோடி சந்தை மதிப்பீட்டில் இந்த நிறுவனம் நடத்தப்பட்டு வருகின்றது.
பெக்டரின் வெற்றி, இந்தியாவில் தங்கள் சொந்த உணவுத் தொழிலைத் தொடங்க வேண்டும் என்று கனவு காணும் எண்ணற்ற பெண்களுக்கு உத்வேகம் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |