அம்மாடியோவ்... 30 நாட்களில் மட்டும் 4.5 கோடி வருமானம்! எப்படி சாத்தியமானது?
கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிறிய அறையில் நடத்தப்படும் ராமேஸ்வரம் கஃபே, என்ற கடையில் மாதம் 4.5 கோடி வருமானம் வருவதாக வெளியான தகவல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
ராமேஸ்வரம் கஃபே
இந்தியாவின் பி2பி வர்த்தக பிரிவில், நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் தளமான UDAAN நிறுவனத்தின் இணை நிறுவனர் சமீபத்தில் ராமேஸ்வரம் கஃபே(rameswaram cafe) பற்றிய வீடியோ ஒன்றை பகிர்ந்திருந்தார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலானது, இதனை தொடர்ந்து உலக நாடுகளில் வாழும், இளைஞர்கள் மத்தியில் ராமேஸ்வரம் கஃபே ஹோட்டல் பேசு பொருளாகியுள்ளது.
அந்த வீடியோவில் பேசிய சுஜீத் குமார் ராமேஸ்வரம் கஃபேயில் ஒரு நாளைக்கு சுமார் 7500 பில்கள் போடப்படுகிறது.
10க்கு 15 சதுர அடி அளவில் உள்ள சிறிய கடையில் மாதம் 4.5 கோடி ரூபாய்க்கு வியாபாரம் செய்வதாகவும், அந்த கடையின் ஆண்டு வருமானம் ரூ. 50 கோடி எனவும் கூறியுள்ளார். இதை விட முக்கியமாக ராமேஸ்வரம் கஃபே 70 சதவீத மார்ஜீன் பெறுவதாக கூறியுள்ளார்.
டிரெண்டிங் தொழில்
பெங்களூர் டெக் சந்தையில் முதலீடு சரிவு, வர்த்தகம் பாதிப்பு என பல பிரச்சனைகள் குறித்து பேசுகையில், ட்ரெண்டிங்கான தொழில்களை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். இதில் ராமேஸ்வரம் ஹோட்டல் இந்தியாவில் முத்திரை பதித்த QSR பிராண்டுகள் உடன் ஒப்பிட்டு பேசப்பட்டது.
மேலும் UDAAN என்ற நிறுவனத்தின் பாட்கேஸ்டில் இந்திய சில்லறை விற்பனை சந்தை, ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளத்தில் வணிகத்தை வளர்ப்பது, மற்றும் இந்தியாவிலும் வெளிநாட்டிலுள்ள தொழில் முனைவோர் மற்றும் முதலீட்டு சுற்றுச்சூழல் அமைப்பு, உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுஜீத் குமார் வெளியிட்ட தகவலை தொடர்ந்து, தொழில் முனைவோர்கள் பலரும் ராமேஸ்வரம் கஃபேயின் தொழில் உக்திகளை பற்றி விவாதித்து வருகின்றனர்.