SIR வெற்றிக்காக பாஜக செய்த சதியா? உடைத்து பேசும் ரங்கராஜ் பாண்டே
வரைவு வாக்காளர் பட்டியலில் 97 லட்சம் பேர் நீக்கப்பட்டிருப்பது குறித்து மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், 6 கோடியே 40 லட்சம் வாக்காளர்கள் நம்மிடம் இருந்தனர். தற்போது 5 கோடியே 40 லட்சமாக மாறியுள்ளது.
97 லட்சம் பேர் என்பது கிட்டத்தட்ட 1 கோடி என்று வைத்துக்கொள்வோம். அதில் கிட்டத்தட்ட 40 லட்சம் வாக்காளர்கள் இறந்திருக்கிறார்கள். 50 லட்சம் வாக்காளர்கள் இடம் மாறியிருக்கிறார்கள்; 3 லட்சம் போலி வாக்காளர்கள் ஆவர்.
அப்படியானால் இதனை பெரிதாக முதலில் எதிர்த்தது திமுக. ஆனால், இது பாஜக செய்த சதி என்று கூட திமுக இப்போது சொல்லவில்லை.
97 லட்சம் வாக்காளர்கள் காணாமல் போயிருக்கிறார்கள் என்பது வெற்றிக்காக பாஜக செய்த சதி என்று திமுக சொல்லியிருக்க வேண்டுமல்லவா! ஏன் கூறவில்லை?
பட்டியல் வெளியாகி 24 மணிநேரம் ஆகிறது; இன்னமும் திமுக தரப்பில் யாரும் பேசவில்லை.
மேலதிக தகவல்களுக்கு காணொளியை காண்க
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |