இலங்கையின் புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்க இன்று மாலை பதவியேற்பு!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று மாலை இலங்கையின் புதிய பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நம்பதகுந்த அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி இலங்கை ஊடகம் ஒன்று இச்செய்தியை வெளியிட்டுள்ளது.
இன்று மாலை 6.30 மணிக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
முன்னாள் பிரதமரான ரணில் விக்ரமசிங்கே, 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் மற்ற கட்சிகள் ஆதரவுடன் ‘அனைத்து கட்சிகள் அடங்கிய அரசாங்கத்திற்கு’ தலைமை தாங்குவர்.
திங்களன்று பதவி விலகிய கோட்டாபய ராஜபக்சேவின் மூத்த சகோதரர் மகிந்த ராஜபக்சவுக்கு பதிலாக பிரதமராக பொறுப்பேற்பார் என எற்கனவே அதிபருக்கு நெருங்கிய மூத்த அதிகாரிகள் தகவல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரணில் விக்ரமசிங்கவை பிரதமராக நியமிக்க இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
1993 மே மற்றும் 2018 டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் விக்ரமசிங்கே இலங்கையின் வரலாற்றில் அதிக தடவைகள் (ஐந்து முறை) பிரதமராக பதவி வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை தலைநகர் கொழும்பிலிருந்து தப்பியோடும் மக்கள்!