மெக்சிகோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரை…கொன்று நிர்வாணமாக சாலையில் தொங்கவிட்ட சம்பவம்
மெக்சிகோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட நபரின் உடல், ஆணுறுப்பு வெட்டி வாயில் வைக்கப்பட்ட நிலையில் சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டு இருக்கும் இரும்பு கம்பியில் கட்டி தொங்க விடப்பட்டுள்ளது.
நிர்வாணமாக தொங்கிய உடல்
மெக்சிகோவில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரின் உடல், சாலையில் குறுக்கே இருக்கும் இரும்பு அமைப்பில் நிர்வாணமாக கட்டி தொங்க விடப்பட்டுள்ளது.
அத்துடன் பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதற்காக அவரது ஆண்குறி வெட்டி எடுக்கப்பட்டு அவர் உடலின் வாயிலேயே திணித்து வைக்கப்பட்டுள்ளது.
Borderland Beat
சிஹுவாஹுவாவில்(Chihuahua) உள்ள காசாஸ் கிராண்டேஸில்(Casas Grandes) இந்த பயங்கரமான காட்சி கண்டுபிடிக்கப்பட்ட போது உள்ளூர் மக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
சாலையின் குறுக்கே கட்டி தொங்கவிடப்பட்ட நபரின் உடல் மீது, அவர் பாலியல் அத்துமீறல் செய்ததால் கொல்லப்பட்டார் என்பதை விளக்கும் அட்டை ஒன்று இணைத்து வைக்கப்பட்டு இருந்தது.
மேலும், “இது பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்கான அவருடைய விதி” என்றும் “அத்துமீறலில் ஈடுபடும் அனைத்து பன்றிகளுக்கும் இது நடக்கட்டும்” என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.
Borderland Beat
அடையாளம் காண முயற்சி
இந்நிலையில் கொலை செய்யப்பட்டவரின் அடையாளத்தை காண பொலிஸார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர்.
மீட்கப்பட்ட உடலை கொண்டு கொலை செய்யப்பட்டவர் 35 முதல் 40 வயதுக்கு இடைப்பட்டவர் என்றும், தோராயமாக 5 அடி 7 அங்குலம் அல்லது 5 அடி 8 அங்குலம் உயரம் கொண்டவர் என்பதை கணித்துள்ளனர்.
Getty Images/iStockphoto
இதற்கிடையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களை விசாரிக்கும் லா வோஸ் டெல் பியூப்லோ அமைப்பின் கூற்றுப்படி, ஐந்து வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறல் செய்ததற்காக கொலை செய்யப்பட்ட நபர் தண்டிக்கப்பட்டு இருக்கலாம் என தெரிவித்துள்ளது.