ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களை ஆதரித்த ராப் பாடகருக்கு சிறைத்தண்டனை
ஈரானில் ஹிஜாப் எதிர்ப்பு போராட்டங்களை ஆதரித்த ராப் பாடகருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய ராப் பாடகர்
ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்களை ஆதரித்ததற்காக பிரபல ஈரானிய ராப் பாடகர் துமாஜ் சலேஹிக்கு (Toomaj Salehi) ஆறு ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனை குறித்து துமாஜ் சாலிஹியின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
ஈரான் அரசை அவமதித்ததற்காக தனிமைச் சிறையில் இருந்த சலேஹி சிறைச்சாலையின் பொதுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
Teresa Suarez/EPA-EFE/Shutterstock
ஆறு ஆண்டுகள் சிறை
சலேஹி தனது பாடல்கள் மற்றும் ஆன்லைன் தளங்கள் மூலம் போராட்டங்களுக்கு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து ஈரான் பொலிஸார் அவரை கைது செய்தனர். துமாஜ் சலேஹி மீது இஸ்லாமிய ஒழுக்கத்திற்கு எதிரான குற்றம் சுமத்தப்பட்டது. இந்நிலையில், அவருக்கு ஆறு ஆண்டுகள் மூன்று மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
Toomaj/Youtube
ஈரானில் ஹிஜாப் அணியவில்லை என்ற குற்றச்சாட்டில் மத விவகாரங்கள் துறையால் கைது செய்யப்பட்ட இளம் பெண் மஹ்சா அமினி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து ஈரானில் போராட்டங்கள் வெடித்தன. போராட்டத்தில் ஈடுபட்ட 11 பேருக்கு ஈரான் உச்ச நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Iran Rap singer, Toomaj Salehi, Iran Hijab protest, Prison, Mahsa Amini Death