ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய அரிய Apple-1 கணினி., ஏலத்தில் ரூ.11.1 கோடிக்கு விற்பனை
ஸ்டீவ் ஜாப்ஸ் உருவாக்கிய அரிய Apple-1 கணினி ஏலத்தில் ரூ.11.1 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஸ்டீவ் வோஸ்நியாக் இணைந்து உருவாக்கிய அரிய Apple-1 கணினி சமீபத்தில் நடந்த ஏலத்தில் $375,000-க்கு (இலங்கை பணமதிப்பில் ரூ.11.1 கோடி) விற்கப்பட்டுள்ளது.
இந்த கணினி, ஆப்பிள் நிறுவனத்தின் ஆரம்பக் காலத்திற்குச் சொந்தமானது என்பதால், கணினி உலகின் வரலாற்றில் முக்கியமான மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
RR ஏல நிறுவனம் நடத்திய "Steve Jobs and the Apple Revolution Auction" என்ற நிகழ்வில் இந்த அரிய கணினி விற்பனை செய்யப்பட்டது.
Apple-1 கணினியின் பதிவுகளில் #91 என குறிப்பிடப்பட்ட இந்த கருவி, 8.0/10 மதிப்பீட்டுடன் மிக சிறப்பான (exceptional) நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
பழைய ஆப்பிள் தயாரிப்புகளை பாதுகாக்கும் கோரி கோஹென் (Corey Cohen) என்பவரால் இது சரி செய்யப்பட்டது.
மேலும், இதன் மதிப்பை உயர்த்துவதற்காக, ஆப்பிள் நிறுவன நிறுவனர்களின் கைகளால் எழுதப்பட்ட குறிப்புகளுடன் ஒரு வழிகாட்டி புத்தகம் கூட இதனுடன் இணைக்கப்பட்டிருந்தது.
Apple-1: 1976-இல் அறிமுகமான முதல் ஆப்பிள் கணினி
Apple-1 கணினி 1976-ஆம் ஆண்டு அறிமுகமானது. அப்போது இதன் விலை $666.66 (சுமார் 2 லட்சம் ரூபா) ஆகும்.
இவ்வகை கணினிகள் 200 மட்டுமே தயாரிக்கப்பட்டன, இதில் 175 கணினிகள் தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
மற்ற கணினிகளை விட தனித்துவமாக, Apple-1 முழுமையாக ஒன்று சேர்க்கப்பட்ட சுற்று பலகையை கொண்டிருந்தது. ஆனால், அதற்கு தனியாக power supply, keyboard மற்றும் display தேவைப்பட்டது.
இந்தக் கணினியில் MOS MCS6502 பிராசஸர், 4KB RAM (8KB வரை விரிவாக்கம் செய்யலாம்), மற்றும் டேட்டா சேமிக்க cassette tapes பயன்படுத்தப்பட்டது.
ஏலத்தில் விற்கப்பட்ட பிற ஆப்பிள் தொடர்பான பொருட்கள்
Apple-1 கணினியுடன் மேலும் பல அரிய ஆப்பிள் பொருட்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.
- ஸ்டீவ் ஜாப்ஸ் 1976-இல் கையொப்பமிட்ட காசோலை - $112,054
- மற்றொரு காசோலை - $62,500
- முதல் தலைமுறை 4GB Apple iPhone (Factory-Sealed) - $87,514
- Apple Lisa கணினி (அரிய 'Twiggy' டிரைவுடன்) - $56,818
Apple-1 கணினி இன்று கணினி வரலாற்றில் முக்கியமான இடம் பிடித்து, கலெக்ஷன் ஆர்வலர்களிடையே மிகுந்த மதிப்பைக் கொண்டிருக்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |