உலகின் எதிர்காலமே இதுதானாம்! தங்கத்தை விட முக்கியம்..நாடொன்றில் கொட்டிக்கிடக்கும் புதையல்
கஜகஸ்தான் நாட்டில் அரிய உலோகங்கள் மற்றும் தாதுக்களின் படிவங்கள், பாரிய அளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதால் உலகின் புதையல் என்று கூறப்படுகிறது.
அரிய உலோகங்கள்
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில் அரிய தாதுக்களின் படிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
குய்ரெக்டிகோல் என்ற பகுதியில், 10 லட்சம் டன் அளவிற்கு அரிய உலோகங்கள் மற்றும் தாதுக்களின் படிவங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவை நவீன மற்றும் பசுமை ஆற்றல் தொழில்நுட்பங்களை உருவாக்க முக்கியமாக தேவைப்படுகின்றன. இதனால் கஜகஸ்தான் நாட்டிற்கு ஒரு பாரிய ஜாக்பாட்டாகவே பார்க்கப்படுகிறது.
8 லட்சம் முதல் 10 லட்சம் டன்
அரிய தனிமங்களின் படிவங்கள் 0.1 சதவீதத்தை விட அதிகமாக குய்ரெக்டிகோல் பகுதியில் இருக்கிறதாம்.
முதற்கட்டமாக இர்கிஸ் பகுதியில் மட்டும் நடத்தப்பட்ட ஆய்வில், சுமார் 8 லட்சம் முதல் 10 லட்சம் டன் அளவுக்கு அரிய உலோகங்களின் படிவங்கள், சராசரியாக 0.1 சதவீதம் என்ற அளவில் இருக்கிறது. 0.1 சதவீதம் என்பது பார்க்கும்போது குறைவாக தோன்றினாலும், உண்மையில் அரிய தனிமங்களின் படிவங்களில் இது அதிகம்.
சில இடங்களில் 0.25 சதவீதம் கூட இருக்கலாம் என்று கணிக்கப்பட்டுள்ளதால் கஜகஸ்தானுக்கு புதையல் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.
300 மீற்றர் ஆழத்தில்
பெரிய ஜானா கஜகஸ்தான் என்ற பகுதியை சுற்றியுள்ள இடங்களில், 300 மீற்றர் ஆழத்தில் 20 மில்லியன் டன்களுக்கும் அதிகமான அரிய உலோகங்களின் படிவங்கள் இருப்பதாகவும் வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
அங்கு சீரியம், லந்தனம், நியோடைமியம் மற்றும் யட்ரியம் போன்ற அதிக மதிப்பு கொண்ட அரிய உலோகங்களின் படிவங்கள் இருக்கிறதாம்.
ஒரு டன்னுக்கு சராசரியாக 700 கிராம் என்ற அளவில் இருக்கிறதாம். உலகின் மற்ற பகுதிகளில் இந்த அளவில் அரிய உலோகங்கள் காணப்படுவது இல்லை என்கிறார்கள் வல்லுநர்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |