பிரான்ஸ் ராணிக்கு சொந்தமான அரிய இசைக்கருவி ரூ.3 கோடிக்கு ஏலம்!
கடைசி பிரெஞ்சு ராணிக்கு சொந்தமான அரிய கிட்டார் ஏலத்தில் விற்பனைக்கு வந்துள்ளது.
கடைசி பிரெஞ்சு ராணி மேரி அன்டோனெட்டிற்கு (Marie Antoinette) சொந்தமான ஒரு அரிய கிட்டார் ஏலத்தில் $84,000 (தோராயமாக இலங்கை ரூ.3 கோடி) வரை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
18-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், ஜாக்-பிலிப் மைக்கேலோட் சிர்காவால் 1775-ல் பாரிஸில் தயாரிக்கப்பட்ட 'Trianon guitar' எனப்படும் இந்த கிட்டாரை, பிரெஞ்சு ஏல நிறுவனமான Aguttes ஒரு அரிய வகை இசைக்கருவியாக பட்டியலிடப்பட்டுள்ளது.
Aguttes
ஏல நிறுவனத்தின்படி, இந்த கிட்டார் 'en bateau' என்று அழைக்கப்படுகிறது. கிட்டாரின் உடல், அழகாக அலங்கரிக்கப்பட்ட பழ மரத்தால் ஆனது.
இது பிரான்ஸ் ராணி தனது வட்டத்தின் உறுப்பினர்களில் ஒருவரான மார்குயிஸ் டி லா ரோசெலம்பேர்ட்-தேவால்ஸுக்கு வழங்கிய பரிசாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
Aguttes
ராணி தனது நெருங்கிய நண்பர்களுக்காக இசைக்கருவிகளை வாங்கியதற்கான ஆதாரம் ஏலப் பட்டியலில் உள்ளது.
இந்த கிட்டார் பிரான்சின் Neuilly-sur-Seine-ல் வியாழன் வரை காட்சிப்படுத்தப்படும்.