பல லட்சம் ரூபாய்க்கு விலை போன ஒற்றை புத்தகம்! அப்படி என்ன தான் உள்ளது அதில்?
ஹாரி பாட்டர்" புத்தகத்தின் முதல் பதிப்பு ஏலத்தில் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது.
ஏலத்தில் சாதனை படைத்த ஹாரி பாட்டர் புத்தகம்
ஜே.கே.ரௌலிங்(J.K. Rowling) எழுதி 1997-ல் வெளியான ஹாரி பாட்டர் தொடரின் முதல் புத்தகம், "பிலாசஃபர்ஸ் ஸ்டோன்”(Harry Potter and the Philosopher’s Stone) தற்போது ஏலத்தில் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இந்தப் புத்தகத்தை முதன் முதலில் தனது மகனுக்கு 10 பவுண்டுகளுக்கு கிறிஸ்டின் மெக்கல்லோக் வாங்கியுள்ளார்.
On this day in 1997, Harry Potter and the Philosopher's Stone was published.
— Harry Potter Stuff ⚯͛ (@TheHPfacts) June 26, 2016
The magic began... pic.twitter.com/IK7xtQy8hA
கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு பிறகு மகன் ஆடம் மெக்கல்லோக், தனது குடும்பத்தின் பழைய வீட்டில் உள்ள அலமாரியில் இந்த புத்தகம் கிடப்பதை கண்டெடுத்தார். அவர் ஒரு இலக்கியப் பொக்கிஷத்தை வைத்திருப்பதை அப்போது அவர் அறியவில்லை.
2020 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காலத்தில் தான் மெக்கல்லோக் குடும்பத்தினர் தங்கள் மறக்கப்பட்ட புத்தகத்தின் உண்மையான மதிப்பை உணர்ந்துள்ளனர்.
இதையடுத்து புதன்கிழமை ஸ்டாஃபோர்ட்ஷையரின் லிச்ஃபீல்டில் நடைபெற்ற ஏலத்தில், இந்த அரிய புத்தகம் 36,000 பவுண்டுகளுக்கு விற்கப்பட்டுள்ளது. வாங்குபவரின் பிரீமியம் தொகை உட்பட அனைத்தையும் சேர்த்து புத்தமானது 45,000 பவுண்டுகளுக்கு ஏலம் எடுத்தவருக்கு விற்கப்பட்டுள்ளது.
இந்த புத்தகம், 1990களில் அச்சிடப்பட்ட 500 பிரதிகளில் ஒன்று. அதன் மதிப்பு 30,000 முதல் 50,000 பவுண்டுகள் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டிருந்தது.
புத்தகத்தை சுற்றிய சிறிய கதை
இந்நிலையில் புத்தகம் குறித்து பிபிசிக்கு ஆடம் மெக்கல்லோக் வழங்கிய தகவலில், "இது ஒரு கனவு அல்லது நினைவுகளை போலிருந்தது" என தெரிவித்துள்ளார்.
மேலும், "எப்படியோ, இந்த புத்தகத்தைச் சுற்றி ஒரு சிறிய கதை உள்ளது. தேநீர் கறைகள், மூலையில் உள்ள சிறிய மடிப்புகள்...யாரோ ஒருவர் அதைப் படித்து மகிழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
இது புத்தகத்தின் மாயத்தை மேலும் அதிகரிக்கிறது என்று நான் நினைக்கிறேன்." என தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |