15 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அரிய டைனோசரின் எலும்புகள் கண்டுபிடிப்பு
தாய்லாந்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள கலாசின் மாகாணத்தில் விஞ்ஞானிகள் அரிய வகை டைனோசரின் புதைவடிங்களை கண்டுபிடித்துள்ளனர்.
இந்த புதிய இன டைனோசருக்கு “Uragasaurus kalasinensis” என பெயரிடப்பட்டுள்ளது. சுமார் 150 மில்லியன் (15 கோடி) ஆண்டுகளுக்கு முன்பு ஜுராசிக் காலத்தில் வாழ்ந்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்த டைனோசர் மிக நீண்ட கழுத்து கொண்டது. இதன் நீளம் சுமார் 20 மீட்டர் (ஒரு கிரிக்கெட் மைதானத்தின் நீளத்திற்கு சமம்) என மதிப்பிடப்பட்டுள்ளது. இது தாவரங்களை உணவாகக் கொண்ட sauropod டைனோசர் குடும்பத்தைச் சேர்ந்தது.
2008-ஆம் ஆண்டு, ஒரு உள்ளூர் நபர் பாம்பு செதில்களைப் போல தோற்றமளிக்கும் சில துண்டுகளை கண்டுபிடித்ததில் இருந்து இந்த ஆய்வு தொடங்கியது. பின்னர் பூ நொய் (Phu Noi) எனப்படும் இடத்தில் விரிவான அகழாய்வு நடத்தப்பட்டது.

அங்கு 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட எலும்புகள் டைனோசர்களுடையவை என கண்டறியப்பட்டது. முக்கியமாக, முதுகெலும்பின் ஒரு பகுதி (dorsal vertebra) CT scan மூலம் ஆய்வு செய்யப்பட்டதில், இது Mamenchisauridae குடும்பத்தைச் சேர்ந்தது என உறுதி செய்யப்பட்டது. இந்த குடும்பம் நீண்ட கழுத்து கொண்ட டைனோசர்களுக்குப் பிரபலமானது.
இந்த கண்டுபிடிப்பு தாய்லாந்தில் முதன்முறையாக நிகழ்ந்துள்ளது. இதன் Y வடிவ எலும்பு அமைப்பு மற்றும் விசித்திரமான காற்று குழி அமைப்பு உலகின் பிற டைனோசர்களில் காணப்படாத தனித்துவம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
500 கோடி பரிசு விழுந்த லொட்டரி சீட்டை குப்பையில் வீசிய கடைக்காரர்- அதிர்ஷ்டத்தை இழக்கவிருக்கும் பிரித்தானிய பெண்
இந்த ஆய்வு Nature என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன், தாய்லாந்தில் Nagatitan எனப்படும் மற்றொரு நீண்ட கழுத்து கொண்ட டைனோசர் கண்டுபிடிக்கப்பட்டது. அது தென்கிழக்கு ஆசியாவில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப்பெரிய டைனோசர் எனக் கருதப்படுகிறது.
இந்த புதிய கண்டுபிடிப்பு, டைனோசர் பரிணாம வளர்ச்சியைப் பற்றி மேலும் அறிய விஞ்ஞானிகளுக்கு முக்கிய ஆதாரமாக உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |