அரிய வகை ஊதா நிற நண்டு - தாய்லாந்து தேசிய பூங்காவில் கண்டுபிடிப்பு
தாய்லாந்து தேசிய பூங்காவில் அரிய வகை ஊதா நிற நண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் Kaeng Krachan தேசிய பூங்காவில் அரிய வகை ஊதா நிற நண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நீர்வீழ்ச்சி பகுதிகளில் காணப்படும் இந்த வகை நண்டு வெள்ளை மற்றும் ஊதா நிறங்களில் காணப்படும்.
இது Sirindhorn நண்டு அல்லது Princess நண்டு என அழைக்கப்படுகிறது.
அதன் வண்ணம் மற்றும் அபூர்வ தன்மை காரணமாக இது உலகம் முழுவதும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நண்டு பாண்டா நண்டு குடும்பத்தைச் சேர்ந்தது. ஆனால் இந்த ஊதா வகை மிகவும் அபூர்வமானது. இது சுற்றுச்சூழல் குறியீடாகவும் கருதப்படுகிறது.
இந்த நண்டு அங்கு இருப்பதனால், இது பூங்காவின் நீர் மற்றும் சுற்றுசூழல் தூய்மையை பிரதிபலிக்கிறது.
இந்த நண்டுக்கு தாய்லாந்து அரச குடும்ப உறுப்பினர் இளவரசி Maha Chakri Sirindhorn-ன் பெயர் சூடப்பட்டுள்ளது. அதனாலேயே இது பிரின்சஸ் நண்டு என அழைக்கப்படுகிறது.
இந்த நண்டு 1986-ல் Ngao நீர்வீழ்ச்சி தேசிய பூங்காவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்டதாக சில அறிக்கைகள் கூறுகின்றன.
பூங்கா அதிகாரிகள் இந்த நண்டை 'இயற்கையின் அரிய பரிசு' என கூறியுள்ளனர்.
இந்த நண்டுகளின் புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Sirindhorn Crab, Rare purple crab Thailand, Kaeng Krachan National Park, Princess Crab, Thailand wildlife, UNESCO World Heritage species, Exotic crab species, Thai Princess Sirindhorn crab