புதிய வரலாறு படைத்த ரஷீத் கான்! வங்காளதேசத்திற்கு தரமான பதிலடி
ஆப்கானிஸ்தானின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளரான ரஷீத் கான் 200 விக்கெட்டுகளைக் கைப்பற்றி சாதனை படைத்தார்.
ரஷீத் கான் அபாரம்
அபுதாபியில் நடந்த ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய வங்காளதேச அணி 221 ஓட்டங்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.
மெஹிதி ஹசன் மிராஸ் 60 (87) ஓட்டங்களும், டௌஹித் ஹிரிடோய் 56 (85) ஓட்டங்களும் எடுத்தனர். ரஷீத் கான், ஓமர்சாய் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினர்.
பின்னர் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 226 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ரஹ்மனுல்லா குர்பாஸ் 50 (76) ஓட்டங்களும், ரஹ்மத் ஷா 50 (70) ஓட்டங்களும், அஸ்மதுல்லா ஓமர்சாய் 40 (44) ஓட்டங்களும் எடுத்தனர்.
புதிய சாதனை
இப்போட்டியில் ரஷீத் கான் (Rashid Khan) 3 விக்கெட்டுகள் கைப்பற்றியன் மூலம் 200 விக்கெட்டுகள் மைல்கல்லை எட்டினார்.
இதன்மூலம் ஒருநாள் போட்டிகளில் ஆப்கானிஸ்தான் அணிக்காக 200 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் எனும் வரலாறு படைத்தார்.
அதிக விக்கெட்டுகள் கைப்பற்றிய ஆப்கானிஸ்தான் வீரர்கள்
- ரஷீத் கான் - 202 விக்கெட்டுகள்
- மொஹம்மது நபி - 176 விக்கெட்டுகள்
- டௌலத் ஜட்ரான் - 115 விக்கெட்டுகள்
- முஜீப் உர் ரஹ்மான் - 101 விக்கெட்டுகள்
- குல்பதின் நைப் - 74 விக்கெட்டுகள்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |