மைதானத்தில் எல்லா பக்கமும் சிக்சர்களை பறக்கவிட்ட 2 வீரர்கள்! மிரண்டு நின்ற நடராஜன் உள்ளிட்ட பவுலர்கள் வீடியோ
ஐபிஎல் போட்டியில் குஜராத் அணி வெற்றிக்கு காரணமாக இருந்த ரஷித்கான் மற்றும் ராகுல் திவேட்டியா ஆகியோர் சிக்சர்களாக விளாசி எதிரணி பவுலர்களை நிலைகுலைய வைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற 40வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதிய நிலையில் குஜராத் அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
Fitting Finish?What A Thriller⚡Exhilarating Knock From GT's Soldiers @rashidkhan_19 & @rahultewatia02 ?#RashidKhan #Rahultewatia #GTvSRH #IPL2022
— ??SPLΞИDID SДҜΓHI?? (@SakthiSathish71) April 28, 2022
Video credits: @edits_manoj Annaaa? pic.twitter.com/A7sZsnzZBO
ஷாபாஸ் அகமதை நம்பி ஓடி ரன் அவுட் ஆன தினேஷ் கார்த்திக்! ஏன் இப்படி செஞ்ச என ஆதங்கப்பட்ட வீடியோ
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் குஜராத்தின் ரஷித் கான் மற்றும் ராகுல் திவேட்டியா ஆகிய இருவரும் தான்.
ராகுல் 2 சிக்சர்களுடன் 40 ரன்களும், ரஷித் கான் 4 சிக்சர்களுடன் 31 ரன்களும் எடுத்து அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றனர்.
நடராஜன் உள்ளிட்ட ஹைதராபாத் பவுலர்களின் பந்துவீச்சை இருவரும் பறக்கவிட்டனர்.
ஒவ்வொரு சிக்சரும் பறக்கும் போதும் தோல்வியை நெருங்குவதை உணர்ந்த கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் பவுலர்கள் மிரண்டு போய் நின்றதை அவர்களின் முகபாவனையே காட்டி கொடுத்தது.