ஆப்கானை Cleansweep செய்த வங்காளதேசம்! மோசமாக விளையாடியதாக ஒப்புக்கொண்ட ரஷீத்கான்
ஷார்ஜாவில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இறுதிப்போட்டியில் வங்காளதேசம் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
சயிஃப்புடின் அபாரம்
ஆப்கானிஸ்தான் மற்றும் வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி ஷார்ஜாவில் நடந்தது.
Darwish Rasooli tonks this majestically for a Maximum! 👊#AfghanAtalan | #AFGvBAN2025 | #GloriousNationVictoriousTeam pic.twitter.com/QU1JpsO4OK
— Afghanistan Cricket Board (@ACBofficials) October 5, 2025
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் அணி 9 விக்கெட்டுக்கு 143 ஓட்டங்கள் எடுத்தது. ரசூலி 32 (29) ஓட்டங்களும், அடல் 28 (23) ஓட்டங்களும், முஜீப் 23 (18) ஓட்டங்களும் எடுத்தனர். சயிஃப் ஹஸன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பின்னர் களமிறங்கிய வங்காளதேச அணியில் பர்வேஷ் ஹொசைன் 14 ஓட்டங்களில் வெளியேற, தன்சித் ஹசன் 33 ஓட்டங்கள் எடுத்தார்.
அடுத்து வந்த ஜாகிர் அலி (10), ஷமீம் ஹொசைன் (0) ஆகியோர் சொதப்ப, சயிஃப் ஹசன் (Saif Hassan) வாணவேடிக்கை காட்டினார். சிக்ஸர்களை பறக்கவிட்ட அவர் ஆட்டமிழக்காமல் 38 பந்துகளில் 64 ஓட்டங்கள் விளாசினார். இதில் 7 சிக்ஸர், 2 பவுண்டரிகள் அடங்கும்.
இதன்மூலம் வங்காளதேச அணி 18 ஓவர்களிலேயே 4 விக்கெட்டுக்கு 144 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
தொடரை வென்ற வங்காளதேசம்
இந்த வெற்றியின் மூலம் வங்காளதேசம் அணி 3-0 என்ற கணக்கில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தொடரை முழுமையாக கைப்பற்றியது.
டி20யில் ஆப்கானிஸ்தானை முதல் முறையாக வங்காளதேச அணி Clean sweep செய்துள்ளது. சயிஃப் ஹசன் ஆட்டநாயகன் விருதும், நசும் அகமது தொடர் நாயகன் விருதும் பெற்றனர்.
தோல்வி குறித்து பேசிய ஆப்கானிஸ்தான் அணித்தலைவர் ரஷீத் கான் (Rashid Khan), "நாங்கள் மோசமான கிரிக்கெட்டை விளையாடினோம். அவர்கள் எல்லா துறைகளிலும் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடினார்கள். நாங்கள் பல கேட்சுகளை தவறவிட்டோம்.
பீல்டிங்தான் நாங்கள் மிகவும் பின்தங்கிய பகுதி, அதனால்தான் நாங்கள் 3-0 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டோம்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |