ராஷ்மிகா மந்தனாவின் 'AI Deep Fake Video' : குரல் கொடுத்த இந்திய அமைச்சர்
நடிகை ராஷ்மிகா மந்தனாவின் AI Deep Fake Video இணையத்தில் பரவி வரும் நிலையில், நடிகர் அமிதாப்பச்சன் அதிர்ச்சி தெரிவித்ததையடுத்து, இந்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தொழில்நுட்பத்திற்கு எதிராக விழிப்புணர்வு குரல் கொடுத்துள்ளார்.
ராஷ்மிகா மந்தனா சித்தரிக்கப்பட்ட வீடியோ
தமிழ், தெலுங்கு ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த ராஷ்மிகா மந்தனா முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். அண்மையில், இவரது வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.
அந்த வீடியோவில், கருப்பு நிற உடையில் லிஃப்டில் ராஷ்மிகா மந்தனா நுழைவது போல காணப்படும். இந்த வீடியோ 14 மில்லியனுக்கு மேல் பார்வையாளர்களை கடந்துள்ளது.
ஆனால் இந்த வீடியோவில் இருப்பது ராஷ்மிகா மந்தனா இல்லை என்றும், ஜாரா படேல் என்ற பிரிட்டிஷ்-இந்தியப் பெண்ணின் வீடியோ `AI Deep fake' தொழில்நுட்பம் மூலம் மாற்றப்பட்டிருக்கிறது என்றும்" தகவல் வந்துள்ளது. இதனால் AI தொழில்நுட்பம் மீது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
இந்திய அமைச்சரின் பதிவு
இது தொடர்பாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது ட்விட்டர் பதிவில், "பிரதமர் மோடி தலைமையிலான அரசு குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் உறுதியாக இருக்கிறது.
ஏப்ரல் 2023 -ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட தகவல் தொழில்நுட்ப விதிகளை சமூக வலைதளங்கள் பின்பற்ற வேண்டும். பயனர்கள் தவறாக பதிவிடப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
சமூக ஊடக தளங்கள் விதிகளுக்கு இணங்கத் தவறினால், பாதிக்கப்பட்ட நபர் அந்தக் குறிப்பிட்ட சமூக வலைதளங்கள்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |