கடுமையான, மன்னிக்க முடியாத தண்டனை வேண்டும் - நடிகை ரஷ்மிகா மந்தனா
AI தொழில்நுட்பத்தை பெண்களுக்கு எதிராக தவறாக பயன்படுத்தும் நபர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று நடிகை ரஷ்மிகா மந்தனா தெரிவித்துள்ளார்.
தவறாக சித்தரித்து புகைப்படங்கள்
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடிகைகளை தவறாக சித்தரித்து புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாவது சமீபத்தில் பேசு பொருளானது. 
பல நடிகர், நடிகைகளும் இதற்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். நடிகை ராஷ்மிகா மந்தனாவை வேறொரு பெண்ணின் முகத்துடன் வைத்து Deepfake வீடியோ வெளியானதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ராஷ்மிகா ஆதங்கம்
இந்த நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனாவும் கொந்தளிப்பாக பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அவரது எக்ஸ்தள பதிவில், "உண்மையை உருவாக்க முடிந்தால், பகுத்தறிவு நமது மிகப்பெரிய பாதுகாப்பாக மாறும்.
AI என்பது முன்னேற்றத்திற்கான ஒரு சக்தியாகும். ஆனால், அதை தவறாகப் பயன்படுத்துவதும் பெண்களை குறிவைப்பதும் சிலரிடம் ஆழமான தார்மீக வீழ்ச்சியைக் குறிக்கும். 
இணையம் இனி உண்மையின் கண்ணாடி அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள். அது எதையும் புனையக்கூடிய ஒரு Canvas. தவறான பயன்பாட்டிற்கு அப்பால் உயர்ந்து, மிகவும் கண்ணியமான மற்றும் முற்போக்கான சமூகத்தை உருவாக்க AIஐப் பயன்படுத்துவோம்.
பொறுப்பற்ற தன்மையை விட பொறுப்பைத் தேர்வு செய்க. மக்கள் மனிதர்களைப் போல் செயல்பட முடியாவிட்டால், அவர்களுக்கு கடுமையான மற்றும் மன்னிக்க முடியாத தண்டனை வழங்கப்பட வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |