மதுபாட்டில்களை சூறையாடிய எலிகள்: கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பொலிஸ்
மத்திய பிரதேசத்தில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த மது பாட்டில்களை எலிகள் சேர்ந்து சூறையாடியதாகவும், அதில் ஒரு எலியை காவலர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கைதான எலி
மத்தியப் பிரதேச மாநிலம் சிந்த்வாரா மாவட்டத்தில் சட்டவிரோதமாக விற்கப்பட்ட மதுபானத்தை அந்த மாவட்டத்தின் பொலிஸார் பறிமுதல் செய்து வைத்திருந்தனர்.
நீதிமன்றத்தில் மதுபாட்டில்கள் சாட்சியங்கள் காட்டப்பட வேண்டும் என்பதால் கைப்பற்றப்பட்ட மதுபானங்கள் அனைத்தும் காவல் நிலையத்தின் ஒரு கட்டிடத்தில் வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் 60-க்கும் மேற்பட்ட மதுபாட்டில்களை எலிகள் குடித்து காலி செய்துள்ளதாக பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் எலிகள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுத்து ஒரு எலியையும் கைது செய்துள்ளதாக நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது நீதிபதியிடம் காட்டியுள்ளனர்.
பொலிஸார் கூறுகையில்
இதுகுறித்து காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், ’’காவல் நிலையத்தில் எலிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. சுமார் 60 முதல் 65 மதுபானங்களை எலிகள் குடித்து உடைந்துள்ளன. அவற்றைச் சுத்தம் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளோம்.
இதையடுத்து எலிகளைப் பிடிக்க கூண்டுகள் கொண்டு வரப்பட்டு ஒரு எலியை பொறி வைத்து பிடிபட்டுள்ளது. மற்ற எலிகள் தப்பி ஓடிவிட்டன. நாங்கள் கைப்பற்றி வைக்கும் கிடங்கை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.
இது தவிர, கிடங்கில் வைக்கப்பட்டுள்ள பொருட்களை எலிகள் தொடர்ந்து சேதப்படுத்துவதாக கூறினார். பல நேரங்களில் முக்கிய ஆவணங்களையும் அழித்து விடுகின்றன.
அத்தகைய சூழ்நிலையில், நிறைய சிக்கல்கள் எழுகின்றன. சில நேரங்களில் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை இரும்புப் பெட்டியில் வைத்து பாதுகாக்க வேண்டிய சூழல் உள்ளது’’ என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |