பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு
இந்தியாவிலிருந்து பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானத்தில் திடீரென அவசர அமைப்பு இயங்கியதை விமான நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது.
ஏர் இந்தியா விமானத்தில் என்ன நடந்தது?
2025 அக்டோபர் 4ம் திகதி இந்தியாவின் அமிர்தசரஸில் இருந்து பிரித்தானியாவின் பர்மிங்ஹாம்(Birmingham) நகருக்கு இயக்கப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787 டிரீம்லைனர் AI117 விமானத்தில் ரேம் ஏர் டர்பைன் (Ram Air Turbine (RAT) இயக்கப்பட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அமிர்தசரஸில் இருந்து புறப்பட்ட விமானம் பர்மிங்ஹாமில் தரையிறங்கும் கடைசி நேரத்தில் இந்த ரேம் ஏர் டர்பைன் (RAT) இயங்கி இருப்பதை விமான நிறுவனம் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், தரையிறங்குவதற்கு கடைசி சில நிமிட இடைவெளியில் இந்த RAT இயக்கப்பட்டு இருப்பதை விமான இயக்க குழுவினர் கண்டறிந்துள்ளனர்.
ஆனால் இந்த சம்பவத்தின் போது மின் மற்றும் ஹைட்ராலிக் அளவுருக்கள் சாதாரணமாக இருந்ததையும் விமான இயக்க குழுவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கடைசி நிமிடத்தில் குளறுபடிகள் ஏற்பட்டு இருந்தாலும் விமான பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது.
ரேம் ஏர் டர்பைன் (RAT) என்றால் என்ன?
RAT என்பது விமானத்தின் அவசர கால அமைப்பு, இது விமானத்தின் என்ஜின்கள் இரண்டும் செயலிழந்து விட்டாலோ, மின் மற்றும் ஹைட்ராலிக் உறுப்புகள் செயலிழந்து விட்டாலோ இந்த அவசரகால மின்சாரத்தை வழங்குவதற்காக RAT தானாக செயல்படும் அமைப்பு ஆகும்.
இவை விமானம் இயங்கி கொண்டிருக்கும் போது ஏற்படும் காற்றின் வேகத்தை பயன்படுத்தி அவசரகால மின்சாரமாக உற்பத்தி செய்யும்.
விமான சேவைகள் ரத்து
RAT இயக்கப்பட்டதை அடுத்து விமானம் முழுமையான சோதனைக்காக பர்மிங்ஹாம் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஏர் இந்தியாவின் பர்மிங்காம் - டெல்லி விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |