பிக் பாஷ்: போராடிய ரிஸ்வானின் விக்கெட்டை வீழ்த்திய சக பாகிஸ்தான் வீரர்
மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்கு எதிரான பிக் பாஷ் போட்டியில், மெல்போர்ன் ரெனெகேட்ஸ் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டாம் கர்ரன் அதிரடி
பிக் பாஷ் லீக் போட்டியில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் மற்றும் மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணிகள் மோதின.
After blocking the first two balls...
— KFC Big Bash League (@BBL) January 4, 2026
Josh Brown went BANG off Glenn Maxwell to get the Renegades underway in the chase! #BBL15 pic.twitter.com/qocE4Byxuh
முதலில் ஆடிய மெல்போர்ன் ஸ்டார்ஸ் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 173 ஓட்டங்கள் குவித்தது. டாம் கர்ரன் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 5 பவுண்டரிகளுடன் 38 ஓட்டங்கள் விளாசினார்.
கெல்லவே 33 ஓட்டங்களும், கார்ட்ரைட் 28 ஓட்டங்களும் எடுத்தனர். குரிந்தர் சந்து 4 விக்கெட்டுகளும், ஸ்டோவ் 2 விக்கெட்டுகளும், ஹஸன் கான் மற்றும் சதர்லேண்ட் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் களமிறங்கிய மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணியில் ஜோஷ் பிரவுன் அதிரடியாக ஆட, முகமது ரிஸ்வான் நிதானமாக ஆடினார்.
பிரவுன், ரிஸ்வான் கூட்டணி
இந்த கூட்டணியின் மூலம் அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அரைசதம் விளாசிய ஜோஷ் பிரவுன் (Josh Brown) 48 பந்துகளில் 4 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 84 ஓட்டங்கள் விளாசிய நிலையில், ஸ்வெப்சன் பந்துவீச்சில் போல்டு ஆனார்.
Muhammad Rizwan picked up four runs at the MCG after this gift from Tom Curran 🫣 #BBL15 pic.twitter.com/XppqiE4J5o
— KFC Big Bash League (@BBL) January 4, 2026
அடுத்து வெற்றிக்காக போராடிய பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் (Mohammad Rizwan) 41 (38) ஓட்டங்களில், சக நாட்டு பந்துவீச்சாளர் ஹாரிஸ் ராஃப் ஓவரில் ஆட்டமிழந்தார்.
அதன் பின்னர் விக்கெட்டுகள் சரிய அணித்தலைவர் வில் சதர்லேண்ட் (Will Sutherland) 2 சிக்ஸர்களை பறக்கவிட்டு, 7 பந்துகளில் 19 ஓட்டங்கள் விளாச, மெல்போர்ன் ரெனெகேட்ஸ் அணி 19.5 ஓவர்களில் 177 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |