இனி வெள்ளியை வைத்தும் வங்கிக்கடன் பெறலாம் - ரிசர்வ் வங்கியின் புதிய விதி
கடந்த சில மாதங்களாகவே தங்கத்திற்கு இணையாக வெள்ளியின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் மக்களும், வெள்ளியை அதிகளவில் வாங்கி குவித்து வருகின்றனர்.
பெரும்பாலான நடுத்தர மற்றும் ஏழை மக்கள் அவசர பணத்தேவைக்கு நகையை வங்கிகளில் வைத்து கடன் பெறுகின்றனர்.
வெள்ளி நகைக்கடன்
முன்னதாக தங்கத்தை வைத்து மட்டுமே கடன் வழங்கப்பட்டு வந்த நிலையில், இனி வெள்ளியை வைத்தும் கடன் வழங்கலாம் என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

புதிய விதிப்படி, இனி வெள்ளி நாணயம் மற்றும் வெள்ளி நகைகளை வைத்தும் வங்கிகள் கடன் வழங்கலாம்.
ஆனால், ஏற்கனவே அடமானம் வைக்கப்பட்ட தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்களை மறு அடமானம் வைத்து அதன் மீது கடன் பெற முடியாது. ஆனால், தங்கம், வெள்ளி கட்டிகள் மற்றும் தங்க பத்திரங்கள்(ETF) அடகு வைத்து கடன் பெற முடியாது.

தற்போது தங்கத்தின் மதிப்பில் 75 சதவீதம் வரை கடன் வழங்கப்பட்டு வரும் நிலையில், அதனை 85 சதவீதம் ஆக உயர்த்துவதாக RBI அறிவித்துள்ளது. அதாவது, 1 லட்சம் மதிப்புள்ள நகைக்கு கடன் பெற்றால், இனி ரூ.85,000 வழங்கப்படும்.
எவ்வளவு அடகு வைக்க முடியும்?
அதேபோல் நகைகளுக்கு கடன் பெற உச்சவரம்பு வைத்துள்ளது. தங்க நகைகளை ஒரு கிலோ வரையிலும், தங்க நாணயங்களை 50 கிராம் வரையிலும் அடமானம் வைத்து கடன் பெற முடியும்.

வெள்ளி நகைகளை 10 கிலோ வரையிலும், வெள்ளி நாணயங்களை 500 கிராம் வரையிலும் அடமானம் வைத்து கடன் பெறலாம் எனத் தெரிவித்துள்ளது.
இந்த விதிமுறைகள் 2026 ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும் என தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |