சால்ட், பட்டிதார் சிக்ஸர் மழை! மும்பை இந்தியன்ஸுக்கு 241 ரன் இலக்கு
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் பிலிப் சால்ட், ரஜத் பட்டிதார் மற்றும் விராட் கோஹ்லி அரைசதம் விளாசினர்.
பிலிப் சால்ட் ருத்ரதாண்டவம்
வான்கடே மைதானத்தில் நடந்து வரும் ஐபிஎல் போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.
நாணய சுழற்சியில் வென்ற மும்பை இந்தியன்ஸ் பந்துவீச்சை தெரிவு செய்ய, பெங்களூரு அணி துடுப்பாட்டத்தைத் தொடங்கியது.
விராட் கோஹ்லி நிதானமாக ஆட்டத்தைத் தொடங்க, பிலிப் சால்ட் நாலாபுறமும் சிக்ஸர்களை பறக்கவிட்டார்.

இதன்மூலம் அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது. அதிரடி அரைசதம் அடித்த பிலிப் சால்ட் (Philip Salt) 36 பந்துகளில் 78 ஓட்டங்கள் (6 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள்) விளாசினார்.
வாணவேடிக்கை
பின்னர் கோஹ்லியுடன் கைகோர்த்த ரஜத் பட்டிதாரும் வாணவேடிக்கை காட்டினார். விராட் கோஹ்லி (Virat Kohli) 50 ஓட்டங்கள் குவித்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் சரவெடி ஆட்டம் ஆடிய ரஜத் பட்டித்தார் 20 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ஓட்டங்கள் விளாசி வெளியேறினார்.
கடைசி கட்டத்தில் டிம் டேவிட் (Tim David) 16 பந்துகளில் 34 ஓட்டங்கள் (3 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள்) விளாச, பெங்களூரு அணி 240 ஓட்டங்கள் குவித்தது.
மும்பை இந்தியன்ஸ் தரப்பில் ஹர்திக் பாண்ட்யா, ட்ரென்ட் போல்ட், மிட்செல் சான்ட்னர் மற்றும் ஷர்துல் தாக்கூர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.


| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |