ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முறித்துக் கொள்ள தயார்! அமைதி வேண்டுமெனில் போருக்கு தயாராகுங்கள்: பிரபல நாடு அதிரடி
ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முறித்துக் கொள்ள ரஷ்யா தயாராக உள்ளது என அந்நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் Sergey Lavrov கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி அரசியல்வாதி Alexey Navalny-யை கைது செய்து சிறையில் அடைப்பது தொடர்பாக, ரஷ்யாவின் பொருளாதாரத்திற்கு ஆபத்துகளை ஏற்படுத்தும் பொருளாதாரத் தடைகள் மீண்டும் விதிக்கப்பட்டால், ரஷ்யா ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முறித்துக் கொள்ளும்.
உலக வாழ்க்கையிலிருந்து தனிமைப்படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் இதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
அமைதி வேண்டுமெனில் போருக்கு தயாராகுங்கள் என ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் Sergey Lavrov கூறினார்.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் Josep Borrell வெளியிட்ட அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் விதமாக Sergey Lavrov-வின் இந்த அறிக்கை வந்துள்ளது.
இந்த மாத தொடக்கத்தில் ரஷ்யாவிற்கு விஜயம் செய்த Josep Borrell , ரஷ்யாவிற்கு எதிராக புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பது குறித்து பிரஸ்ஸல்ஸ் பரிசீலிக்கும் என்றும், பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் நடைபெறும் ஐரோப்பிய ஒன்றிய உச்சி மாநாட்டில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் கூறினார்.
மேலும், ஐரோப்பாவிலிருந்து ரஷ்யா தன்னை விலக்கி கொண்டிருப்பதாகவும் Borrell கூறினார்.
Borrell கருத்துக்களால் ஆச்சரியப்படுவதாகக் குறிப்பிட்ட ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அவர் வெளியிட்ட அறிக்கையுடன் முரண்பட்டன.